இலங்கையிலிருந்து தமிழகத்திற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்? கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று  தேவாலயம் மற்றும் பிரபல ஓட்டல்களின் மீது நடைப்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்திய அரசு இலங்கைக்கு நட்பு நாடு என்கிற அடிப்படையில் குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை தேடும் பணியில் உதவி செய்ய முன்வந்தது.

அதன் அடிப்படையில் தமிழகத்திற்குள் ஊடுருவி உள்ள பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 6 பேர் இலங்கை வழியே தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், இலங்கையைப் போன்று தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாகவும் தமிழக டிஜிபி திரிபாதிக்கு மத்திய உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. 

மத்திய உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் காவல் ஆணையாளர்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான படகுகளை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி நேற்று இரவு முதலே அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் ஊடுருவியிருக்கும் 6 பயங்கரவாதிகளும் கோவையில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் கோவையில் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. கோவை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். பொது இடங்கள் மற்றும் பதற்றமான இடங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்து சுற்றி வருகின்றனர். 

நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து பயங்கரவாதிகள் மாறுவேடத்தில் ஊடுருவி  இருக்கலாம் என்றும் உளவுத்துறை கூறி உள்ளது.

பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் நபர்களின் புகைப்படங்களை கோவை போலீசார் வெளியிட்டு உள்ளனர். 6 பயங்கரவாதிகளில் 3 பேரின் படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top