காஷ்மீர் விவகாரம்- டெல்லியில் திமுக தலைமையில் 14 கட்சிகளின் எம்.பி.க்கள் போராட்டம்

காஸ்மீர் மக்களுக்கு பாஜக துரோகம் செய்து விட்டது.காஸ்மீரின் சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது மற்றும் ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக  பிரித்தது. இதற்கான மசோதாவை இந்த மாத துவக்கத்தில் பாராளுமன்ற இரு அவைகளிலும் பல எதிர்ப்புகளிடையே தனது மிருகப்பலத்தால் பாஜக அரசு  நிறைவேற்றியது. 

அத்துடன் ஜம்மு காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்களுக்கு எதிராக  ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு என்ற பெயரில் ஒட்டுமொத்த மக்களும் கண்காணிக்கப்படுகிறார்கள். அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து திமுக சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில், திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பலர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் எம்.பி.யும் போராட்டத்தில் பங்கேற்றார்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள் முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர்.

எந்த தேசிய கட்சியும் முன்னெடுக்காத மாநில உரிமை பிரச்சனையை தமிழகத்தின் எதிர்கட்சியாக இருக்கும் திமுக முன் எடுத்திருப்பது கவனிக்கத் தக்கது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top