அரசுக்கு எதிரான குரலை கட்டுப்படுத்தும் முயற்சிதான் எனது தந்தை ப.சிதம்பரம் கைது – கார்த்தி சிதம்பரம்

அரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலை கட்டுப்படுத்தும் முயற்சி இது என ப.சிதம்பரம் கைது குறித்து அவரது மகன் கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார்.

ப.சிதம்பரத்தின்  மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் தன் தந்தையின் கைது குறித்து   நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து சம்மன்களுக்கும் ப.சிதம்பரம் ஆஜராகியுள்ளார். என் தந்தை எங்கும் தலைமறைவாகவில்லை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையே எனது தந்தை கைது. அரசுக்கு எதிரான எனது தந்தையின் குரலை கட்டுப்படுத்தும் முயற்சி இது. 

 ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது காஷ்மீர் விவகாரத்தை திசைதிருப்பும் செயல். இதுவரை என் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கும், சிதம்பரத்திற்கும் உள்ள நற்பெயரை கெடுக்கவே இந்த கைது நடவடிக்கை ஆகும். எனது தந்தைக்கு மட்டுமல்ல, இது காங்கிரசுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கை. சட்டரீதியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளேன்.

காஷ்மீர் விவகாரத்தை கண்டித்து டெல்லியில் இன்று திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறேன் என கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top