நதிநீர் ஒப்பந்தம் மீறல்;இமாலய மலையிலிருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க இந்தியா திட்டம்

உலகத்தில் எந்த நாடும் செய்ய தயங்குகிற மனிதாபமற்ற ஒரு செயலை தைரியமாக இந்திய அரசு செய்யத் துணிகிறது.உலகத்தில் இந்தியாவிற்கு இருக்கிற நற்பெயர் என்பது இந்தியா ஒரு ஜனநாயக நாடு மற்றும் அது அகிம்சையை வலியுறுத்தும் நாடு என்பதுதான்.அதை சமீபத்தில் காஸ்மீர் விசயத்தில் இழந்துவிட்டது. மேலும், இப்போது பாகிஸ்தானுக்கு பாயும் நதி நீரை தடுக்க முயற்சிகள் எடுப்பதன் மூலம் உலக நாடுகளிடமிருந்து இந்தியா அவப்பெயரை சம்பாதிக்கப்போகிறது

இமாலய மலையிலிருந்து  பாகிஸ்தானுக்கு பாயும் நதி நீரை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய நீர்வளத்துறை மந்திரி தெரிவித்துள்ளது அதிர்ச்சி செய்தியாக இருக்கிறது

காஷ்மீருக்கு வழங்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்த பாகிஸ்தான், இந்தியாவுடனான தூதரகம் உள்பட அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தது.

மேலும்,சீனாவின் உதவியுடன் ஐ.நா. சபையில் காஷ்மீர் குறித்து விவாதம் மேற்கொள்ள வேண்டுமேன முயற்சி செய்தது உலக நாடுகளின் கவனத்தைக் கவர்ந்தது.அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதற்கொண்டு மோடியிடம் சமாதானமாக பேசச்சொல்லியிருப்பது கவனத்திற்கு உரியது  

உலகரங்கில் இந்தியாவின் பெயர் காஸ்மீர்  விசயத்தில் சிக்களுக்குள்ளாகியிருப்பது பிரச்சனையாக இருப்பதால் இதற்கு பாகிஸ்தான் காரணமாக இருந்ததால் அதை பழிவாங்கும் நோக்கில் இப்போது புது நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு

இமய மலையில் இருந்து இந்தியா வழியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுத்து நிறுத்துவதன் மூலம் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் நீரை இந்தியாவிற்குள் மடை மாற்றி விடலாம் என யோசித்து, அதற்கான  முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து பேசிய மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறுகையில், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நதிகளை தடுத்து நிறுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. மேலும், அந்நாட்டுக்கு பாயும் நதிகளை இந்தியாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு திருப்பி விட திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள் இரு நாடுகளும் செய்து கொண்ட நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை பாதிக்காத வகையில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். 

இது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல     இரு நாடுகளும் செய்து கொண்ட நதி நீர் பங்கீட்டு ஒப்பந்த மீறல் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top