7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது! தமிழக அரசு பதில்;ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்தி வைப்பு

7 பேர் விடுதலை பற்றிய நளினியின் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், நளினி உள்ளிட்டோரது கருணை மனுவை தமிழக அரசே பரிசீலித்து, முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த வருடம் செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது.

இதனை தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசியல் கட்சிகள் வற்புறுத்தின.

இதன்பின் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சிறையில் இருக்கும் ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னருக்கு பரிந்துரைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் அனுப்பியும் கவர்னர் முடிவெடுக்கவில்லை என நளினி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஜூலை 12ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட நளினி தரப்பு, 7 பேரை விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்குமாறு கவர்னருக்கு  உத்தரவிட வேண்டும் என கோரியது.

அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்தார். மேலும், 7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர்  சட்ட ஆலோசனை செய்து வருவதாக கூறினார்.

7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க, கவர்னருக்கு  உத்தரவிட கோரிய வழக்கு, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த உத்தரவு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக நளினி தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடந்தது.  இதில், 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்தது.  இதனை தொடர்ந்து இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top