அத்திவரதர் விசயத்தில் மத உணர்வை தூண்டியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு சம்மன்

மத உணர்வை புண்படுத்துவதாக அளித்த புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயருக்கு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

காஞ்சிபுரத்தில்  நடைபெற்ற அத்திவரதர் வைபவம் பெரிய அளவில் கலை கட்டியது மட்டுமல்ல கல்லாவும் கட்டியது.தனி மனித நம்பிக்கையான பக்தி இங்கு கடுமையாக வியாபாரம் ஆக்கப்பட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் எந்தவிதமான அடிப்படை வசதியும் அற்ற காஞ்சிபுரத்தில் வந்து செல்வது பற்றி தமிழக அரசும் மத்தியில் ஆளும் பாஜக அரசும் கவலை படவில்லை.அத்திவரதர் திடீரென  பிரபலமாகிவிட்டதால் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்யமுடியவில்லை   

அத்திவரதர் தினசரி செய்தியாக முன் பக்கம் எல்லாப் பத்திரிக்கையிலும் இருந்தார்.கூட்ட நெரிசலில் இறந்து போனவர்களை பற்றி பத்திரிகையில் வரும் செய்திகள் இரக்க உணர்வையும் ,எச்சரிக்கை உணர்வையும்  மக்களிடம் எடுத்துச் செல்லாமல் அத்தி வரதரை எப்படியாயினும் தரிசிக்க வேண்டிய பக்தியின் பிரச்சாரத்தையே எடுத்துச் சென்றது, .பத்திரிக்கையும் அதை கவனமாக பார்த்துக்கொண்டது    

அதன் நீட்சியாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோபர் ராமானுஜர் ஒரு பேட்டியில் இஸ்லாமியர்களை இழிவு படுத்துவிதமாக பேசி அத்திவரதருக்கு விளம்பரம் செய்தார்.  இந்த பேட்டியின்போது அவர் மத உணர்வை புண்படுத்தும்படி பேசியதாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சையது அலி என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் மனுவை பதிவு செய்த போலீசார், வரும் 22-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி ஜீயருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

இந்த  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயர் சடகோபர் ராமானுஜர்தான் ஆண்டாள் விசயத்தில் எனக்கு சோடபாட்டில் வீச தெரியும் என்று ஆகமவிதிகளுக்கு எதிராக பேசி வைணவ மக்கள் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top