மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி பேசுவது கருப்பு பணத்தை காப்பாற்றவே! வேல்முருகன் குற்றச்சாட்டு

கருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் செயல்படுகிறார் என்று வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக அரசியலில் தன்னை ஒரு சக்தியாக நினைத்து அவ்வப்போது பாஜகவுக்கு ஆதரவாக கருத்து சொல்லி வரும் நடிகர் ரஜினிகாந்த், நேரிடையான அரசியலுக்கு வருவதாக சொல்லி காலம் கடந்தும், இன்னும் வரவில்லை.ஆனால், பாஜக வுக்கு ஆதரவாக எப்போதும் பேசிவருகிறார்.அவருக்கு பின்னால் பாஜக இயக்குகிறது என்று பலபேர் சந்தேகம் கிளப்பி இருந்தாலும்  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டியில் சொல்லியிருக்கும் விஷயம் நியாயமாக தெரிகிறது.

இந்தியாவிலே அதிகமாக வருமானவரி சோதனை நடந்த மாநிலம் தமிழ்நாடு.மத்தியில் பாஜக வந்த நாளிலிருந்து எதோ ஒரு இடத்தில் வருமான வரி சோதனை நடந்து வருவது தெரிந்ததே!சாதாரண நடிகர் வீடுகளில் வருமானவரி சோதனைகள் நடக்கும் போது பெரிய நடிகரான ரஜினி வீட்டில் நடக்காததற்கு காரணம் அவர் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதுதான்   

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டங்களான ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மயிலாடு துறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அணு உலை திட்டம் போன்ற பேரழிவு திட்டங்களுக்கு எதிராக தமிழக வாழ்வுரிமை கட்சி தொடர்ந்து போராடும்.

காஷ்மீர் பிரச்சினையில் நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு சாதகமான பதிலை தெரிவித்துள்ளார். தான் நடிக்கும் படங்களில் வாங்கி வரும் பெரும் கருப்பு பணத்தை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான் மத்திய- மாநில அரசுகளுக்கு ஆதரவாக அவர் எப்போதும் குரல் கொடுத்து வருகிறார். தமிழக மக்கள் தான் அவரை பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top