ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா? இந்தியாவிற்கு சாதகமற்ற சூழல்!

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கடிதம் எழுதி இருந்தது.  இன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை ஆலோசனைக் கூட்டம் நடக்கவிருக்கிறது

காலகாலமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைகள் ரத்து செய்யப்பட்டு, காஸ்மீர் அரசரின் ஒப்பந்தத்தை மீறி அரசியலமைப்பின் 370-வது பிரிவை இந்திய அரசு திரும்பப் பெற்றது. மாநிலத்தை இரண்டாகப் பிரித்து லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என யூனியன் பிரதேசங்களாக மாற்றியது.

காஷ்மீரில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடந்த 4-ம் தேதியிலிருந்து இந்தியப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். “மிருகங்களை கூண்டில் அடைத்து வைப்பது போல இந்தியா எங்களை துன்புறுத்துகிறது” என்று முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா ஜாவேத் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.இது உலக தலைவர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளது

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட அறிவிப்புக்குப் பின் அம்மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காஷ்மீருக்கு இந்தியா அளித்துள்ள சிறப்பு அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதி இருந்தது. சீனாவும் இது தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்த ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சுமார் 40 வருடங்களுக்குப் பிறகு, காஷ்மீர் தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் மக்மூத் குரேஷி கூறும்போது, “இது இரு நாடுகளுக்கிடையேயான நிலம் தொடர்பான பிரச்சினை அல்ல. இது மனிதநேயப் பிரச்சினை என்பதை உலக நாடுகள் உணர வேண்டும். 40 வருடங்களுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் காஷ்மீர் குறித்து ஆலோசிக்க இருப்பது சாதனையாகும்” என்று தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி லோதி கூறும்போது, ”ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் நிலையைல் கருத்தில்கொண்டு ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குத்ரெயிஸ் தனது குரலை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம்” என்றார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 15 பேர் கொண்ட குழு இடப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐ.நா.சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு சாதகமான சூழல் ஏற்படாது,ஆனாலும் அமெரிக்கா இந்தியாவிற்கு கை கொடுக்கும் என தெரிகிறது.

காஸ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா ஏற்கனவே மத்தியஸ்தம் பண்ண தயாராக இருந்தது இப்போது அதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஒருவேளை, அமெரிக்கா இந்தியாவிற்கு சாதகமாக செயல்பட்டால் பிரதிபலனாக இதை பயன்படுத்தி இறக்குமதி பொருளுக்கு வரிவிதிப்பை நீக்கச் சொல்லும் அவ்வாறு இந்தியா நடந்தால் வரி நீக்கத்தின் பெரும் சுமை இந்திய மக்களின் தலையில்தான் விடியும்கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top