வெறுப்புணர்வு, அடிப்படைவாதத்திற்கு எதிராக செயலாற்ற சோனியா காந்தி வலியுறுத்தல்

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி,.டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களிடையே பேசினார்.அவர் பேசியதாவது:

நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக, லட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அதனை மனதில் வைத்து, சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும்.

இந்தியா தற்போது அனைத்து நிலைகளிலும் அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. ஆனால் உண்மை, அமைதி, மனிதநேயம், நாட்டுப் பற்று உள்ளிட்ட முக்கிய மான விஷயங்கள் பின்தங்கி விட்டன.

வெறுப்புணர்வு, அடிப்படை வாதம், இனப் பாகுபாடு, சகிப்பின்மை, அநீதி ஆகியவற்றுக்கு சுதந்திர இந்தியாவில் இடமில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கும் அதேசமயத்தில், இவற்றுக்கு எதிராகவும் மக்கள் குரலெழுப்ப வேண்டும். இவ்வாறு சோனியா தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top