‘விலங்குகளை போல கூண்டில் அடைபட்டுள்ளோம்’ – மெஹபூபா மகள் அமித்ஷாவுக்கு கடிதம்; ஐநா வருத்தம்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு முன்பு இந்திய அரசு குறிப்பாக அமித்ஷா ஜம்மு காஷ்மீரின் அரசியல் மற்றும் இயக்க தலைவர்கள் அனைவரையும்  வீட்டு காவலில் வைத்து விட்டார்.

ஒட்டுமொத்த காஸ்மீர் தலைவர்களும் கைது செய்துவைக்கப்பட்ட செய்தி உலகெங்கும் பரவியது. உடனே அமித்ஷா காஸ்மீர் தலைவர்கள் அவர்களே தங்களை வீட்டுச் சிறைக்குள் தள்ளிக்கொள்கிறார்கள் என்று பாராளுமன்றத்திலே கூறினார் .

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இவ்வளவு நாள் ஆனபிறகும் தலைவர்களை அமித்ஷா விடுதலை செய்யவில்லை. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா ஜாவேத் அமித்ஷா விற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்


கூண்டில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகளை போல வீட்டில் சிறைபட்டுள்ளோம் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா ஜாவேத் கடிதம் எழுதியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. மேலும் அங்கு வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்தநிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மெஹபூபா முப்தியின் மகள் இல்டிஜா ஜாவேத் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில் ‘‘நாட்டின் மற்ற பகுதிகளில் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

ஆனால் காஷ்மீர் மக்கள், கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள விலங்குகள் போன்று அடிப்படையான மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளனர்.

வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளோம். எங்களை பார்க்க யாரேனும் வந்தால் அந்த தகவல்கள் கூட எனக்கு அளிக்கப்படுவதில்லை. வீட்டு கதவை தாண்டி என்னை பாதுகாப்பு படை வீரர்கள் அனுமதிப்பதில்லை.

தடுத்து வைக்கப்பட்டுள்ளதை ஊடகங்களில் கூட தெரிவிக்க முடிவதில்லை. மோசமான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கப்படுகிறோம். ஆனாலும் நான் மீண்டும் பேசுகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி அவர் ‘மீண்டும் வாய்ஸ் மெசேஜ்’ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘‘மத்திய அரசின் நடவடிக்கைகளால் காஷ்மீருடன் மற்ற பகுதிகளுக்கான தொடர்பு முற்றிலும் முடங்கிபோயுள்ளது. நான் ஒரு கிரிமினல் போன்று நடத்தப்படுகிறேன்.

தொடர்ந்து நான் கண்காணிக்கப்படுகிறேன். மற்ற காஷ்மீரிகளை போலவே, எனது வாழ்க்கையை எண்ணி நான் பயப்படுகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.. 

உலக மனித உரிமை அமைப்புகள் தலையிட்டு இந்த விசயத்தில் இந்தியாவிற்கு பாடம் புகட்டவேண்டும் என  ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிரதிநிதிகள் சிலர் குரல் கொடுத்ததாக தகவல்கள் வருகிறது  .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top