காஷ்மீர் மக்கள் படும் துன்பம்; 2 மணி நேரம் காத்திருந்து 2 நிமிடம் மட்டுமே பேச வாய்ப்பு

2 மணி நேரம் கால் கடுக்க வரிசையில் காத்து நின்று, 2 நிமிடம் மட்டுமே தொலைபேசியில் குடும்பத்தினருடன் பேசும் நிலை, காஷ்மீர் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட காஸ்மீரில் மக்கள் போராட்டம் வெடித்து விடக்கூடாது என்பதற்காக பாஜக அரசு கடுமையான இராணுவப் பாதுகாப்பை போட்டிருக்கிறது

காஸ்மீர் பிரச்சனையை நேரில் பார்த்து எழுத எந்த பத்திரிக்கையையும் மத்திய அரசு அனுமதிப்பதில்லை. இராணுவம் என்ன சொல்கிறதோ அதைதான் பத்திரிகைகள் செய்திகளாக போட்டுக்கொண்டிருக்கிறார்கள்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, கடந்த 5-ந் தேதி அதிரடியாக, காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது.


அத்துடன் காஷ்மீர், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வருகிற 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து காஷ்மீரில் தகவல் தொடர்பு சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செல்போன் சேவை, இணையதள சேவை கிடையாது.

எங்கெங்கோ வாழ்ந்து கொண்டு இருக்கிற காஷ்மீர் மக்கள் சொந்த ஊருக்கு போக முடியாத பரிதாப நிலை நிலவுகிறது.

பக்ரீத் பண்டிகையைக்கூட காஷ்மீர் மக்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கிருந்து கொண்டாடும் நிலை உருவானது.

இருப்பினும் அவசர தொலைபேசி சேவையை அரசு ஏற்படுத்தி இருப்பதாக சொல்கிறார்கள்.  இந்த தொலைபேசி சேவையானது, ஸ்ரீநகரில் உள்ள துணை கமிஷனர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் தைரியமாக செல்ல முடிய வில்லை

இந்த தொலைபேசியை பயன்படுத்தி, வெளியூர்களில் உள்ள குடும்பத்தினருடன் ஒருவர் பேச வேண்டுமென்றால் அவர் குறைந்தபட்சம் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. அப்படி 2 மணி நேரம் காத்திருந்தாலும், 2 நிமிடத்தில் உரையாடலை முடித்துக்கொள்ள வேண்டிய சூழலும் இருக்கிறது.தங்கள் உரையாடலை கண்ணீருடன் தொடங்கி கண்ணீருடன் முடித்துக்கொள்கிறார்கள்.

இந்த தொலைதொடர்பு கட்டுப்பாடு, ஆட்கள் போக்குவரத்து கட்டுப்பாடு இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று டெல்லியில் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் காஷ்மீர் மாநில முதன்மை செயலாளர் ரோகித் கன்சால், “காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுதந்திர தின ஒத்திகை முடிந்ததும் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என நம்புகிறோம்” என கூறினார்.

காஷ்மீர் மக்கள் இயல்பு நிலை என்று திரும்பும் என கண்ணீரோடு காத்திருப்பது என்னவோ உண்மைதான்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top