காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலிருந்து சோனியா – ராகுல்காந்தி இருவரும் வெளியேறினர்

டெல்லியில் நடைபெற்று வரும் செயற்குழு கூட்டத்திலிருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி புறப்பட்டு சென்றனர். அடுத்த காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனையில் பங்கேற்கவில்லை.

டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் தொடங்கியது,  கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் , வேணுகோபால், ஏ.கே. அந்தோணி,குலாம் நபி ஆசாத், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். பின்னர்  தொடர்ந்து காங்கிரசின் அடுத்த தலைவரை தேர்ந்து எடுப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. இதில்  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொணடனர். கூட்டத்தில், இருந்து சோனியா, ராகுல் காந்தி வெளியேறினர்

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறுவது குறித்து சோனியா காந்தி கூறியதாவது:- இப்போது ஆலோசனை (அடுத்த கட்சித் தலைவரை தீர்மானிக்க) நடந்து கொண்டிருக்கிறது, இயல்பாகவே நானும் ராகுல் ஜியும் அதில் ஒரு பகுதியாக இருக்க முடியாது என கூறி கூட்டத்தில் இருந்து வெளியேறினார்

காங்கிரஸ் ,செயற்குழு கூட்டம், சோனியா காந்தி ,– ராகுல்காந்தி, இருவரும் வெளியேறினர்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top