பாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

மத்தியில் ஆளும் பாஜக கட்சியின் மூத்த தலைவர்களுக்கு இப்போது சரியான நேரம் இல்லை போலும்.பெருவாரியான மூத்த தலைவர்கள் உடல்நலம் குன்றியே காணப்படுகின்றனர்

தற்போது முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான அருண் ஜெட்லி (66), சமீப காலமாக ஓய்வில் இருந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து டயாலிசிஸ் செய்து வந்தார்.

இந்நிலையில், முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு உள்ளார். மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top