பாஜக வின் முக்கிய தலைவர், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்

முன்னாள் மத்திய-மந்திரி சுஷ்மா சுவராஜ் (67) உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களுள் ஒருவர் சுஷ்மா ஸ்வராஜ். இவர் ஹரியான மாநிலத்தில் 1953-ம் ஆண்டு பிறந்தார்.

7 முறை மக்களவை முதல்வராக செயல் பட்டுள்ள சுஷ்மா ஸ்வராஜ், டெல்லி மாநில முதல்வராகவும் இருந்துள்ளார்.

2014 முதல் 2019 வரையிலான பாஜக ஆட்சியின் போது வெளியுறவுத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு நாட்டு மக்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்றார்.  முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு இரண்டாவது பெண் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றவர் சுஷ்மா.

இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார். தற்போது சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷ்மா மாரடைப்பு காரணமாக தனது 67-வது வயதில் காலமானார்

சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின்  பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். 


சுஷ்மா சுவராஜ் அம்பாலாவில் உள்ள எஸ்.டி கல்லூரியின் என்.சி.சி சிறந்த கேடட் விருது பெற்றார்.

# 1973 ல் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.

# மே 2008 – 2009: மாநிலங்களவை ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்.

# 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி சுஷ்மா சுவராஜ் மக்களவையில் பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

27 மே 2014 முதல் 16 பிப்ரவரி 2016 வரை மத்திய அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான துறையில் அமைச்சராக பணியாற்றினார்.

வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை சுஷ்மா சுவராஜ் செய்து வந்தார். சமூக வலைதளங்களில், இந்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்து வந்தார். இதனால், பலரும் அவரை பாராட்டி வந்தனர். 

சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில், உடல்நலக்குறைவால் சுஷ்மா சுவராஜ் தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார்.  இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,   இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் காலமானார்.  சுஷ்மா அவர்களின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர். 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top