இந்தியாவின் காலனி மாநிலமாகிறது ஜம்மு காஷ்மீர்; இனி என்ன நடக்கும்?

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீரில் நிறைய அதிரடி மாற்றங்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, பாகிஸ்தான் சுதந்திரம் அடையும் போது காஸ்மீர் தனி நாடாக இருந்தது. பாகிஸ்தானும் இந்தியாவும் காஸ்மீரை தங்கள் நாடுகளோடு இணைக்க முயற்சி செய்தார்கள் இதில் நேரு புத்திசாலித்தனமாக காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்குடன் ஒரு ஒப்பந்தம் போட்டார். அது  காஸ்மீர்  தனி நாடு  என்ற அந்தஸ்துடன் இருக்கும் ,உங்களுக்கான தனி கொடி,அரசியல் அமைப்பு சட்டம் ,பிரதமர் என்கிற வகையில் எல்லா தனித்தன்மையுடன் காஸ்மீர் விளங்கும் இந்தியாவோடு இணைவதால் இந்திய அரசியல் அமைப்பு சட்டமோ ,பாராளுமன்ற நடவடிக்கைகளோ உங்களை கட்டுபடுத்தாது என்று வாக்குறுதி கொடுத்து காஸ்மீரை இந்தியாவோடு இணைத்தார்

இவ்வாறான பல்வேறு நிபந்தனைகளுக்கு பிறகுதான் ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணைய ஒப்புக் கொண்டார். 

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பிற மாநிலங்களை போல அல்லாமல் சில சிறப்பு உரிமைகள் அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்டது. அரசியல் சாசனப்பிரிவு 370 தான் இந்த சிறப்பு உரிமைகளை காஷ்மீருக்கு வழங்கி வருகிறது.

சட்டப் பிரிவு 370-இன் கீழ் வழங்கப்படும் சிறப்புச் சலுகைகள் என்ன… என்ன..?

இராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பாக மத்திய அரசு பாராளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள், இம்மாநிலத்தின் அனுமதி இல்லாமல் இயற்றினால், அந்த சட்டங்கள் இம்மாநிலத்திற்கு பொருந்தாது.

ஜம்மு  காஷ்மீர் மாநிலத்தில் பிற மாநிலத்தவர்கள் அசையா சொத்துகளை வாங்க முடியாது. ஆனால் இம்மாநில மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அசையா சொத்துகளை வாங்கலாம். 

இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் இம்மாநிலத்தில் அசையா சொத்துகளை வாங்க முடியாது. ஆனால் ஆண்கள் வெளிமாநில பெண்களை திருமணம் செய்து கொண்டால், அவர்கள் இம்மாநிலத்தில் அசையா சொத்துகளை வாங்கலாம்.

ஜம்மு காஷ்மீருக்கு தனி கொடி, தனி அரசியல் சாசனம் என்று இருந்த எந்த விதமான அதிகாரங்களும் இனி இருக்காது. 

இந்தியாவில் பிறப்பிக்கப்படும் சட்டங்கள் அனைத்தும் காஷ்மீருக்கு பொருந்தும். மாநிலத்தின் எல்லைகளை விரிவுப்படுத்தவோ, குறைக்கவோ முடியாது என்கிறது அரசியல் சாசனத்தின் 370-வது விதி. 

ஆனால் இனி மத்திய அரசு நினைத்தபடி எல்லைகளை மாற்றலாம். இந்திய அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு இம்மாநிலத்திற்கு பொருந்தாது என்ற நிலை தற்போது நீக்கப்பட்டுள்ளது. 

இனி அனைத்து துறை சார்ந்தும்  மத்திய அரசு நிறைவேற்றும் மசோதாக்களை ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சம்மதம் இல்லாமல் அங்கு அமலுக்கு கொண்டு வர முடியும். இனி வெளிமாநில ஆண்களை காஷ்மீரில் வாழும் பெண்கள் மணமுடித்தால் அந்த ஆண்களால் இங்கு சொத்துகளை வாங்க முடியும். முன்பு இந்த அதிகாரம் கிடையாது.

ஒட்டுமொத்தத்தில் காஸ்மீரின் தனிப்பட்ட சிறப்பு உரிமைகள், காலம்காலமாக இருந்து வந்த மரபு வழி உரிமைகள் பறிக்கப்பட்டு இந்தியா கொடுத்திருந்த வாக்குறுதி அனைத்தும் மீறப்பட்டு இந்தியாவின் காலனி மாநிலமாக ஆக்கப்பட்டு இருக்கிறது .வைகோ சொன்னது போல இன்று பாராளுமன்றத்தில் ஆக பெரும் ஜனநாயகப் படுகொலை நிகழ்த்தப்பட்டு இருக்கிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top