‘அத்தி வரதப்பா புத்தி வராதப்பா’ ஆன்மிக சொற்பொழிவாளர் சுகிசிவம் பேச்சு; மக்கள் ஆதரவு! கட்சி எதிர்ப்பு!

தமிழகத்தின் தலையாய பிரச்சனைகள் பல இருந்தாலும் தலைப்பு செய்தியாக இருப்பது காஞ்சிபுரத்து அத்தி வரதர் பற்றிய செய்திதான்.தினமும்  லட்சக்கணக்கான மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகிறார்கள் என்ற செய்தி பிரதானமாக இருக்கிறது

சமூக அக்கறை கொண்டவர்கள், அவர்கள் கடவுள் பக்தி கொண்டவராக  இருந்தாலும் கூட அத்திவரதர் பற்றிய பரபரப்பு  செய்திகள் மிகவும் சங்கடத்தில் ஆழ்த்துவதாக சொல்கிறார்கள்.அந்த வகையில் பக்தி சொற்பொழிவாளர்  சுகி சிவம் சமீபத்தில் பேசிய பேச்சு மிகவும் கவனிக்கதக்கதாகவும் பாரட்டதக்கதாகவும் இருக்கிறது என்று சமூக வலைத் தளங்களில் பேசப்பட்டு வருகிறது .

காஞ்சிபுரத்தில் லட்சக்கணக்கான தொண்டர்களால் தர்சிக்கப்பட்டு வரும் அத்திவரதர் குறித்து ‘அத்தி வரதப்பா புத்தி வராதப்பா’என்று பிரபல சொற்பொழிவாளர் சுகி சிவம் பேசியது ஆன்மிகத் தளத்திலிருந்து ஒரு பக்கம் பாராட்டும், இந்து உணர்வாளர்களில் சிலர் கடுமையாக எதிர்த்தும் வருகின்றனர்.

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுகி சிவம் அத்தி வரதரின் திடீர் பிரபலம் குறித்துப் பேசியபோது,’இவ்வளவு நாட்களாக நம் ஊரில் உள்ள பெருமாளுக்கு வராத ‘பவர்’ 40 வருடம் தண்ணீருக்குள் இருந்து வந்திருப்பவருக்கு இருக்கும் என்று நினைத்தால்… இதை நான் எங்கோ போய் சொல்வது? அத்தி வரதப்பா… புத்தி வராதப்பா…

இன்றைக்கு இது எவ்வளவு பெரிய சூதாட்டமாக மாறுகிறது. வயதானவர்கள் சென்று நசுங்கி, செத்து, கர்ப்பிணி பெண்கள் சென்று நசுங்கி துன்பப்படுகிறார்கள்.நான் நிஜமாகவே கேட்கிறேன். நாம் கஷ்டப்பட வேண்டும் என்று கடவுள் நினைப்பாரா? நாம் கஷ்டப்பட வேண்டும் என்று நினைத்தால் அவர் கடவுளா? ஒரு நாளும் கடவுள் அப்படி நினைக்க மாட்டார்.

இந்த ஊரில் உள்ள சாமிக்கு இல்லாத சக்தி, அந்த ஊரில் உள்ள சாமிக்கு இல்லாத சக்தி, இதுவரை நாம் கும்பிட்ட எந்த சாமிக்கும் இல்லாத சக்தி, இப்போது புதிதாக கிடைத்திருக்கிற இவருக்கு மட்டுமே இருக்கிறது என்று நினைக்கிறோம்.நீங்கள் இருக்கிறபடி இருந்தால் கடவுள் உங்கள் வீடு தேடி வந்து அருள் செய்யத் தயாராக இருக்கிறார்’என்று பேசினார்.

சொற்பொழிவாளர் சுகிசிவம் பேச்சு குறித்து காஞ்சிபுரத்து மக்கள் மத்தியில் பெரும் ஆதரவும் பாஜக கட்சி சார்ந்தவர்களிடையே எதிர்ப்பும் நிலவி வருகிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top