20 ஓவர் ஆட்டம் ;வெஸ்ட் இண்டீஸ் அணியை போராடி விழ்த்தியது இந்திய அணி

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் 20 ஓவர் ஆட்டம் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இன்று தொடங்கியது.


இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.


இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 95 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் சைனி 3, புவனேஸ்வர் குமார் 2, வாசிங்டன் சுந்தர், கலில் அகமது, குருணால் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 

இந்திய அணி வீரர்கள் ரோகித் 24, தவான், 1, விராட் கோலி 19, ரிஷப் பந்த் 0, மனிஸ் பாண்டே 19, குணால் பாண்டியா 12, ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். 

இதனையடுத்து ஜடேஜா (10), வாசிங்டன் சுந்தர் (9) இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

இதனால் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top