தமிழகத்தில் கலவரம் தூண்ட முயற்சிகிறது உலக தமிழ் பிராமணர்கள் மாநாடு; காவல்துறையிடம் மனு

பிற சாதிய அமைப்புகள் மத்தியில் கலவரத்தை தூண்டிவிட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் உலக தமிழ் பிராமணர்கள் மாநாடும் அதில் பேசிய வெங்கடகிருஷ்ணன் எனும் நபர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க சொல்லி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக காவல்துறை ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது

உலக தமிழ் பிராமணர்கள் மாநாடு கேரளாவில் நடந்தது. அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளும் ,பிராமண பேராசிரியர்களும் கேரளாவை சேர்ந்த நீதிபதி  சிதம்பரேஷ் மற்றும் எண்ணற்றவர்கள் கலந்துகொண்டார்கள்

அதில் பேசிய கேரள நீதிபதி சிதம்பரேஷ் “பிராமணர்கள் இரு பிறப்பாளர்கள் (அவர்களுக்கு மறு பிறவி கிடையாதாம்!) என்றும், எல்லா நற்குணங்களையும் கடவுள் வழங்கியுள்ள உயர்சாதியினர் என்றும் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி பேசியுள்ளார் மற்றும் நிகழ்வில் பேசிய வெங்கடகிருஷ்ணன் எனும் நபர் வேத பரம்பரை (Vedic Heitage) எனும் தலைப்பில் பேசியது பெரும் சர்சையை ஏற்படுத்தி இருக்கிறது

டாக்டர்.M.A.வெங்கடகிருஷ்ணன் பேராசிரியர் (ஓய்வு) Madras University தற்போது Sastra University, திவ்யபிரபந்தம் படிப்பின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். அவர் பேசும்போது பிறப்பால் அனைவரும் சமமல்ல என்றும், பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்றும் சாதி மோதலைத் தூண்டும் வகையிலும், சாதி மறுப்புத் திருமணம் செய்தோரை இழிவு செய்யும் வகையிலும் Tamil Brahmins Global Summit எனும் நிகழ்வில் பேசியுள்ளார்

மேலும், தனது உரையின் ஆரம்பத்திலேயே  Tamil Brahmans Global Meet-ஐ தமிழ்நாட்டில் ஏற்பாடு பண்ண முடியாது. ஏனென்றால் தமிழ்நாடு அந்த அளவுக்கு கெட்டுக் கிடக்கிறது. மேலும் தமிழ்நாட்டின் Caste System ஆகட்டும், Political System ஆகட்டும் எந்த System வைத்து பார்த்தாலும் அது அப்படித்தான் இருக்கிறது என்று தமிழக மக்களையும், தமிழக அரசையும் நேரடியாக குற்றம் சுமத்தி தனது உரையை அவர் ஆரம்பிக்கிறார். மேலும் அவர் பேசுகையில் வேதம் கற்பது என்பது பிராமணர்களுக்கான தனியுரிமை என்றும், நான்காம் இனத்தவரான சூத்திரர்கள் வேதம் கற்றுக்கொள்ள மறுக்கப்பட்டுள்ளனர் என்றும் சாத்திய மோதலை உருவாக்கும் நோக்கிலும் ,மற்ற இனத்தவரை அவதூறு செய்தும் பேசியுள்ளார்

நாய்களுக்கு கூட இனப்பிரிவு உண்டு என்றும், அவை அனைத்தும் பிறப்பினால் சமமில்லை என்றும், குதிரைகளுக்கும் அவ்வாறே என்றும், கலப்பின பிறப்புகள் செல்லாதவை என்றும், இனம் மாற்றப்பட்ட விதைகளுக்கு கூட மதிப்பில்லை என்றும், இவ்வாறு விலங்குகள், மற்ற உயிரினங்கள் கூட பிறப்பினாலேயே ஏற்றத்தாழ்வு உடையதாக இருக்கும்போது மனிதன் மட்டும் எவ்வாறு பிறப்பினால் சமமாவான். இவ்வாறாக பிறப்பினாலேயே உயர்ந்துள்ள பிராமணர்கள் மேலானவர்கள் என்றும், மற்றவர்கள் அவர்களுக்கு நிகரில்லை என்றும் கலப்பின பிறப்புகள் தவறானவை என்றும் பேசியுள்ளார்.

இவ்வாறு வேண்டுமென்றே அரசுக்கு எதிராகவும், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும், அடிப்படை உரிமைகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், சாதிகளுக்கிடையே கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற எண்ணத்துடனும், பிராமண குடி பிறப்பினாலேயே ஒருவன் உயர்வானவன் என்று சாதி, மத மோதலை தூண்டிவிடும் எண்ணத்திலும், சூத்திரர்கள் வேதம் கற்பது தவறானது என்று சாதிய வன்முறையை தூண்டி அரசுக்கு எதிராக கிளர்ச்சி உண்டு பண்ணவேண்டும் என்ற பீதியை உண்டாக்கி பொதுமக்கள் மத்தியிலும், பிற சாதிய அமைப்புகள் மத்தியிலும் கலவரத்தை தூண்டிவிட்டு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய வெங்கடகிருஷ்ணன் எனும் நபரின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக இன்று (8-3-2019) காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கையளிக்கப்பட்டது.

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நாகை திருவள்ளுவன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட தலைவர் குமரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் உமாபதி, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் வினோத், வழக்கறிஞர்கள் மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் ஆகியோர் இணைந்து இப்புகாரினை அளித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top