கவுரவக் கொலையை தடுக்காவிட்டால் போலீஸ் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை ஐகோர்ட்டு எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கவுரவக் கொலையை தடுக்க சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கவுரவக் கொலை அடுத்தடுத்து நடந்தது. இதுகுறித்து பத்திரிகைகளில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.


பின்னர், கவுரவக் கொலையை தடுக்க சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எந்த அளவு தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது? என்று விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தனர். இதன்படி, தமிழக டி.ஜி.பி. சார்பில் உதவி ஐ.ஜி. சாம்சன் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், தமிழகம் முழுவதும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கவுரவக் கொலையை தடுக்க சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.

மற்றும் கவுரவக் கொலையை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த பிளக்ஸ் பேனர் நகரமெங்கும் வைத்ததாகவும் மக்களுக்கு துண்டு பிரசுரமாக நோட்டிஸ் போட்டு கொடுத்ததாகவும் கூறியிருந்தனர்

இதை படித்து பார்த்த நீதிபதிகள், அதில் கூறப்பட்டுள்ள விவரங்கள் திருப்திகரமாக இல்லை என்று அதிருப்தி தெரிவித்தனர்.கோர்ட்டில் இருக்கிற மற்ற வழக்கறிஞர்களை பார்த்து நீங்கள் எங்கேயாவது நோட்டிஸ் மற்றும் பிளக்ஸ் பேனரை பார்த்து இருக்கிறீர்களா? என்று கேட்டனர்  அவர்கள் இல்லை என்றனர் பின்னர், மிகவும் கடுமையாக காவல்துறையை கண்டித்தனர் ‘கவுரவக் கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க தவறினால், போலீஸ் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்படும்’ என்று எச்சரிக்கை செய்தனர். பின்னர், இந்த வழக்கை இன்று (புதன்கிழமை) . மீண்டும் விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top