பலமான எதிர்ப்போடு முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஆதரவாக 99 உறுப்பினர்கள், எதிராக 84 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டு நிராகரிக்கப்பட்ட முத்தலாக் மசோதா கடந்த சில நாட்களுக்கு முன் பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அதன்மீது விவாதம் நடைபெற்று, பின்னர் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக, அதிமுக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பலான கட்சிகள் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.


இதனால் அதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்புக்கு முன் அதிமுக எம்.பி.க்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். டிஆர்எஸ், தெலுங்கு தேசம், பிஎஸ்பி கட்சிகளும் வெளிநடப்பு செய்தனர்.

தேர்வுக்குழுவுக்கு அனுப்ப 100 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். 84 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தேர்வுக்குழுவுக்கு அனுப்பும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.பின்னர் வாக்குச் சீட்டு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 84 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனால் மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறியது.

மசோதா ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன்பின் சட்டமாகும்.வெளிநடப்பு செய்த கட்சிகள் எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த மசோதா தோல்வியடைந்து இருக்கும்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top