வட இந்தியக் கொலைகள்;பிரபலங்கள் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மணிரத்தினம் கையெழுத்து இடவில்லையா ?

மோடிக்கு பிரபலங்கள் எழுதிய கடிதத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம்  கையெழுத்திடவில்லை என ஒரு செய்தி சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது  

.வட இந்தியாவில் பசுக்கள் பெயரைச் சொல்லி மனிதர்களை கொலை செய்யும்  கும்பல் அதிகரித்து விட்டது.அப்படியான கொலைகளை தடுத்து நிறுத்துங்கள் என மோடிக்கு மனித உரிமையில் ஆர்வம் உள்ள, இந்திய ஒன்றியத்தின் இறையாண்மையை காக்க வேண்டும் என்று சில  பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் மணிரத்தினம் கையெழுத்து போடவில்லை என்று ஒரு சர்ச்சை கிளம்பி இருக்கிறது

“மணிரத்னம் தனது புதிய படத்தின் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவர் அதுபோன்ற கடிதத்தில் கையெழுத்திடவும் இல்லை, கையெழுத்திடுமாறு யாரும் அவரை அணுகவில்லை”.என மணிரத்னத்தின் குழுவினர் தெரிவித்ததாக செய்தி வெளிவந்தது

இதை தொடர்ந்து இந்தியாவில் கும்பல் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் திரைப்பட இயக்குனர் மணிரத்னம் கையெழுத்திட மறுத்ததாக கூறும் பதிவுகளின் உண்மை பின்னணி என்ன என்று இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளரிடம் கேட்டபோது அவர் . இதுபற்றி அதிகம் கருத்துக் கூற முடியாது என்றும், கடிதத்தில் மணிரத்னத்தின் கையெழுத்து 100 சதவிகிதம் உண்மையானது என அவர்  தெரிவித்தார்.

இந்நிலையில் ,நரேந்திர மோடிக்கு எழுதப்பட்ட கடிதத்தில் மணிரத்னம் கையெழுத்திட மறுத்துவிட்டதாக கூறும் பதிவுகள் ட்விட்டரில் வைரலாகியுள்ளது. இதுதவிர பல்வேறு செய்தி நிறுவனங்களும் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளன. 

வைரல் பதிவுகளுக்கு பதில் அளிக்கும் வகையில் சுஹாசினி மணிரத்னம் ட்விட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் “தயவுசெய்து மணிரத்னம் சார்பாக பேசவோ, எழுதவோ செய்யாதீர்கள். தவறான விளக்கங்கள் மீது தள்ளியே இருங்கள்” என தெரிவித்திருக்கிறார்.

இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி நடிகை சுஹாசினி பட்டும் படாமலும் பதிவு செய்த ட்விட் சமூக வலைத்தளங்களில் பல கேள்விகளை உருவாக்கி வைரலாகி வருகிறது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top