யூடியூப்பில் சாதனை படைக்கும் பெண்களுக்கான கீதமாக ‘சிங்கப்பெண்ணே’ பாடல்!

விஜய்யின் ‘பிகில்’ படத்தில் இடம் பெறும் ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூப்பில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பிகில்’. இதில் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோர் கால்பந்து வீராங்கனைகளாக நடித்துள்ளனர்.

Thalapathy 63: Sun TV bags satellite rights of Vijay’s next with Atlee

கடந்த 23-ந் தேதி ‘சிங்கப்பெண்ணே’  பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியானது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடியிருந்தார். பெண்களை போற்றும் விதத்தில் உருவாக்கப்பட்ட இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வைரலாகிக்கொண்டிருக்கிறது .

சிங்கப்பெண்ணே பாடல் பெண்களை போற்றும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண் இனமே பெண்களை வணங்கும். பெண் என்று கேலி செய்த கூட்டம் ஒரு நாள் உன்னை வணங்கும். உலகத்தில் இருக்கும் எல்லாம் வலிகளும் பெண்களின் பிரசவ வலிக்கு முன் சாதாரணம். அன்னை, தங்கை, மனைவி என்று பன்முகம் கொண்ட பெண் எதற்கும் பயப்படக்கூடாது. பெண்கள் சாதாரணமானவர்கள் இல்லை. பல திறமைகள் கொண்ட அவர்கள் அனைத்து தடைகளையும் தகர்த்து துணிந்து செல்ல வேண்டும் என்று பாடல் வரிகள் குறிப்பிடுகிறது.

கவிஞர் விவேக் இந்த வரிகளுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசை உயிர் கொடுத்திருக்கிறது. ‘எழு எழு எழு…’ என்று ரகுமான் பாடும் போது நமக்குள் ஒரு எனர்ஜியை கொடுக்கிறது. பெண்களுக்கான கீதமாக இப்பாடலை உருவாக்கி இருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘சிங்கப்பெண்ணே’ பாடல் அனைத்து பெண்களுக்கும் உத்வேகம் கொடுக்கும் எழுச்சி பாடலாக அமைந்துள்ளது. உலகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் இந்த பாடலை படக்குழுவினர் சமர்ப்பித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top