மாநில அரசின் உரிமை பறிப்பு; மோட்டார் வாகனச்சட்ட திருத்த மசோதா- 2019; ஒரு பார்வை

கடந்த ஜீலை 15’2019 அன்று பாராளுமன்றத்தில் ’’மோட்டார் வாகனச்சட்ட திருத்த மசோதா’ 2019” (The Motor Vehicles(Amendment) Bill’2019) தாக்கல் செய்யப்பட்டு மூன்று நாட்களுக்கு முன் ஜீலை 23’2019 அன்று லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த மாசோதா இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக வருமேயானால், இனி மாநில மற்றும் வட்டார போக்குவரத்து கழகங்கள் என்ற அமைப்புக்கு வேலையில்லை ஏனென்றால் இந்த மசோதாவில் இரண்டு துணை அமைப்புகள் அமைக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

1.National Transportation Policy 
2.Road Safety Board

1.National Transportation Policy:  

இனி, ஏற்கனவே சந்தையிலிருக்கும் வாகனங்களுக்கான உரிமம் வழங்குவது, வாகனங்களுக்கான சட்டதிட்டங்களை வகுப்பது, புதிய மாடல் வாகனங்களை சந்தைப்படுத்தும் போது அதற்கான வழிமுறைகளை வகுப்பது மற்றும் உரிமம் வழங்குவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இந்த அமைப்பே செய்யும். இந்த அமைப்பை கட்டுப்படுத்தும் அதிகாரம் முழுக்க முழுக்க மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. தேவை ஏற்படுமாயின் மாநில் அரசிடம் கருத்து மட்டும் கேட்டுக்கொள்ளலாம்.

2.Road Safety Board :

சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் கவனிக்கவும், வாகனங்களுக்கான வழிமுறைகளை உருவாக்குவது, புதிய வாகனங்களை பதிவு செய்வது மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்குவது, ஏற்கனவே சொந்த மற்றும் பணிகளுக்கு பயன்படுத்தும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் Fitness Certificate (FC) அனுமதித்தல் போன்ற பணியினை இந்த அமைப்பு செய்யும். இந்த அமைப்பையும் முழுவதுமாக மத்திய அரசே கட்டுபடுத்தும்.

இப்படிப்பட்ட மசோதா  லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டது, ஒருவேளை ராஜ்யசபாவில் நிறைவேறி சட்டமானால் மாநிலத்திலுள்ள வட்டார மற்றும் மாநகர போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட அனைத்தும் இழுத்து மூடிவிட்டு எல்லாவற்றிக்கும் மத்திய அரசைநோக்கி கையேந்த வேண்டியது தான்.

கொண்டல்சாமி

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top