தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் 24 சதவீதம் குறைவு! சென்னை வானிலை மையம்

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

சென்னை வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். வடதமிழகம், தென்தமிழகத்தில் மழைக்கு  வாய்ப்பு  உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பை விட 24 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என கூறினார்.

தமிழ்நாடு வெதர் மென் அறிக்கையில்

“பெரும்பாலும் தமிழகத்தின் வடக்கு  மாவட்டங்களான வேலூர், திருவள்ளூர், காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சென்னை உட்பட சில இடங்களில் மழை பெய்யும். கடந்த சில நாட்களைப் போல மிதமான மழை சாத்தியம் மற்றும் பரவலாக இல்லை என்றாலும்  நகரின் சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்யும், சில பகுதிகள் முழுமையாக வறண்டுவிடும். தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் அதிக மழை பெய்யவில்லை.என்பது வருத்தத்துக்குரிய செய்திதான்”என்கிறார்  

.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top