முத்தலாக் மசோதா; கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் நிறைவேறியது

இன்று மக்களவையில் முத்தலாக் மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேறியது. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

கடந்த முறை பாஜக அரசு நிறைவேற்ற முடியாமல் போன மசோதாக்கள் எல்லாம் இந்த பாராளுமன்ற தொடரில் வைத்து மிருக பலத்தோடு இருக்கும் அரசால்  நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறி NIA மசோதா, RTI மசோதா ,UAPA மசோதா ,போன்றவை நிறைவேற்றப்பட்டன

இந்நிலையில் ,முத்தலாக் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெற்றது. இன்று மாலை 6.30 மணி வரை விவாதம் நடந்தது. விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையான வகையில் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். பின்னர் சட்ட மந்திரி ரவி சங்கர் பிரசாத் பதில் அளித்தார்.வழக்கம்போல நாட்டு பாதுகாப்பு ,இஸ்லாமிய பெண்கள் பாதுகாப்பு என அளந்து விட்டார்

அதன்பின் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மக்களவையில் பா.ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால் மசோதா எளிதாக நிறைவேறியது.

காங்கிரஸ், திமுக போன்ற கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வது குறித்து சர்ச்சை எழுப்பப்படுகிறது. ஏன் அவர்கள் எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்து பாஜக கொண்டுவந்த மசோதாக்களுக்கு வலு சேர்க்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில்  குற்றம் சட்டப்படுகிறது இதுகுறித்து அக்கட்சிகள் பதிலளிக்கவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top