நெல்லை திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை

நெல்லையில் வீட்டில் இருந்த திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக சார்பில் நெல்லை மாநகர மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. இன்று மாலை ரெட்டியார்பட்டியில் உள்ள தனது வீட்டில் உமா மகேஸ்வரி தனது கணவர் மற்றும் வீட்டுப் பணிப்பெண்ணுடன் இருந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

சம்பவம் இடத்துக்கு விரைந்த போலீசார் கொலை குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லையின் முக்கிய பகுதியில் முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top