சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை;எதிர்கட்சிகள் குழப்பம்

திடீரென அதிரடியாக சென்னை, மதுரை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் ஆகிய ஐந்து நகரங்களில் என்.ஐ.ஏ சோதனை தொடர்ந்து  நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக என்ஐஏ தமிழகத்தில் முகாமிட்டு பல இஸ்லாமியர்களை கைது செய்து இருக்கிறது.

சமீபத்தில் என்ஐஏ- தேசிய புலனாய்வு பிரிவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் திருத்த மசோதா ஒன்று நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு பிரிவு (திருத்தம்) மசோதா எனப்படும் இந்த மசோதா கடந்த 15-ந் தேதி அங்கு நிறைவேறியது.

2009 முதல் 2014 வரை என்ஐஏ தொடங்கப்பட்டதிலிருந்து, ஏஜென்சி 80 வழக்குகளை பதிவு செய்துள்ளது.மோடி ஆட்சிக்கு வந்தபிறகு என்ஐஏ 195 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த கூடுதல் அதிகாரம் ஒரு சமூகத்திற்கு எதிராக குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடும் என்று எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

“இந்த மசோதா தவறாக பயன்படுத்தப்படாது” என்று நான் சபைக்கு உறுதியளிக்கிறேன்.  என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்பட கூறியதால் தமிழகத்தின் திமுக உள்ளிட்ட கட்சிகள் சில கேள்விகள் மட்டும் கேட்டுவிட்டு ஆதரவு தெரிவித்தன. சமூகவலைத்தளங்களில் இது குறித்து விவாதங்கள் பெருகிய நிலையில் திமுக எம்பி ஆ.ராஜா தன்னுடைய முகநூலில் நாங்கள் அப்படி சும்மா விட்டிரமாட்டோம் என்று பதிலளித்து இருந்தார்.ஆனால், இங்கு நடக்கும் நிலைமை அப்படி இல்லை!   

கடந்த இரண்டு மாதங்களாக என்ஐஏ தமிழகத்தில் முகாமிட்டு பல இஸ்லாமியர்களை கைது செய்து வருகிறது, மட்டுமல்லாமல் பள்ளிவாசல் கட்டுவதற்கு வெளிநாடுகளிடமிருந்து பணம் வாங்கியவர்களை தீவிரவாதிகள் போல் கைது செய்திருக்கிறது என்று இஸ்லாமிய அமைப்புகள், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிம் அன்சாரி  எம்எல்ஏ ஆகியோர் கூறிவருகிற நிலையில்  

கடந்த வாரம் டெல்லியில் 14 பேர் என்ஐஏவால் கைது செய்யப்பட்டு, சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களை பத்து நாட்கள் காவலாளர்கள் பிடியில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து நீதிமன்றம் பத்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. 

கைது செய்யப்பட்டவர்களை சென்னை, மதுரை, தேனி, நெல்லை ஆகிய இடங்களில் உள்ள அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கைதான 5 பேர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி, நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள இப்ராஹிம் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை காரணமாக அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ராமநாதபுரம் மற்றும் தேனி உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திடீரென பெரம்பலூர் லெப்பைக்குடிகாட்டில் குலாம்நபி ஆசாத் எனபவர் வீட்டில் என்ஐஏ திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது. மேலும், நாகை நெல்லையில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு சமூக மக்களிடையே பதட்டத்தையும்,பயத்தையும் அதே நேரத்தில் மாற்று சமூக மக்களிடையே இவர்களை பற்றிய ஒரு பிம்பத்தையும் தேவையில்லாமல்  இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top