‘தேசிய மருத்துவ ஆணையமாக’ மருத்துவ கவுன்சில் மாற்றப்பட்டது! புதிய மசோதா மந்திரிசபை ஒப்புதல்

கடந்த 2017-ம் ஆண்டு நிறைவேற்றப்படாத மசோதாக்களை எல்லாம் இந்த முறை நிறைவேற்றிட மும்முரமாக இருக்கிறது பாஜக.கடந்த முறை தோல்வியில் முடிந்த மருத்துவ மசோதாவை இந்தமுறை நிறைவேற்றி விட்டது

மருத்துவர்களின் போராட்டங்கள், எதிர்ப்புகள் இவைகளை மீறி  1956 ம் ஆண்டு மருத்துவ கவுன்சில் சட்டத்தை முழுதுமாக நீக்கிவிட்டு மருத்துவ கல்வியில் புதிய கொள்கைகளை அமல்படுத்துவதற்கு வகைசெய்யும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கி உள்ளது .


மருத்துவ கல்வியில் புதிய பாஜக கொள்கைகளை அமல்படுத்துவதற்கு வகைசெய்யும் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை வழங்கியது. இந்த மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் ஆகிறது.இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், 1956-ஐ முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தேசிய மருத்துவ ஆணைய சட்டம் கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு முடிவு எடுத்துள்ளது. இது மருத்துவ கல்வியில் புதிய சீர்திருத்தங்களுக்கு வழி வகுக்கும் என பாஜக சொல்கிறது ஆனால் மற்ற கட்சிகள் மருத்துவ ஆலோசகர்கள் இதை மறுத்து பேசியிருக்கிறார்கள்இந்த மசோதா 16-வது மக்களவையில் கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.ஆனால் அப்போது அது நிறைவேற்றப்படவில்லை. அந்த மக்களவையும் கலைக்கப்பட்டு விட்டதால் மசோதா காலாவதியாகி விட்டது.இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில், திருத்தங்களுடன் கூடிய தேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.இந்த மசோதா, நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்று இது சட்டமாகி விடும்.இந்த மசோதா சட்டமாகி நடைமுறைக்கு வந்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது தெரிய வந்துள்ளது. அவை வருமாறு:-

* இந்திய மருத்துவ கவுன்சில் என்ற பெயர் மாற்றப்பட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்று இருக்கும்

* நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டுத்தேர்வு பொதுவானதாக ஆக்கப்படும். இது தேசிய வெளியேறும் தேர்வு (நெக்ஸ்ட்) என அழைக்கப்படும். இதுதான் மருத்துவ மேற்படிப்புக்கான தகுதித்தேர்வாக அமையும். மருத்துவர் தொழில் செய்வதற்கான உரிமம் பெறுவதற்கும் இதுவே தகுதித் தேர்வு ஆகும். வெளிநாட்டில் மருத்துவம் படித்து விட்டு வருகிற பட்டதாரிகளுக்கும் இதுவே சோதனை தேர்வாக அமையும். இந்த ‘நெக்ஸ்ட்’ தேர்வு எய்ம்ஸ் என்னும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்துக்கும் பொருந்தும்.

* மருத்துவ கல்வி, மருத்துவ தொழில், மருத்துவ கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் இனி தேசிய மருத்துவ ஆணையம்தான் ஒழுங்குபடுத்தும்.

* தனியார் மருத்துவக்கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் 50 சதவீத இடங்களுக்கான கட்டணம், பிற கட்டணங்கள் ஆகியவற்றை தேசிய மருத்துவ ஆணையம்தான் முறைப்படுத்தும்.

* மருத்துவ அளவீடு மற்றும் மதிப்பீட்டு வாரியம் (மார்ப்), இனி மருத்துவ கல்லூரிகளின் தரத்தை அளவிடும், அவற்றின் தர வரிசையை வெளியிடும்.

* தேசிய மருத்துவ ஆணையத்தில் 4 வாரியங்கள் இருக்கும். அவை, பட்டதாரி மருத்துவ கல்வி வாரியம், முதுநிலை மருத்துவ பட்டதாரி கல்வி வாரியம், மருத்துவ அளவீடு மற்றும் மதிப்பீட்டு வாரியம், நெறிமுறை மற்றும் மருத்துவ பதிவு வாரியம் ஆகும். இவை தன்னாட்சி அமைப்புகளாக இருக்கும்.

* மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புகளை தொடங்குவதற்கும், மருத்துவ பட்டதாரி மற்றும் முதுநிலை மருத்துவ பட்டதாரி வாரியங்கள் நிர்ணயிக்கும் தரத்துக்கு ஏற்ப மருத்துவ படிப்பு இடங்களை அதிகரிக்கவும் மருத்துவ அளவீடு மற்றும் தர வாரியம்தான் அனுமதி அளிக்கும்.

* புதிய மருத்துவ கல்லூரிகள் ஆண்டுதோறும் அங்கீகாரத்தை புதுப்பிக்கும் முறை ரத்து செய்யப்பட்டு விடும்.

1956 ம் ஆண்டு மருத்துவ கவுன்சிலில் உள்ள  58 சட்டங்களை தேவையற்றவைகளாக கருதி அதை ஒழிக்கவும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டு உள்ளதுகருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top