தமிழகம் –கேரளா மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளா மற்றும் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் கடந்த ஜூன்1ம் தேதி முதல் பல்வேறு நகரங்களில் ஆங்காங்கே மழைப்பெய்ய தொடங்கியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  புவியரசன் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை உள்மாவட்டங்களில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இதனால் கன்னியாகுமரி, நெல்லை, கோவை, நீலகிரி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

மேலும் தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மற்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறும் போது தமிழ்நாடு,கேரளா பகுதிகளில் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வியாழன் முதல் வருகிற திங்கள் கிழமை வரை அதிகம் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.கேரளாவிற்கு ரெட் அலர்ட் கொடுக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள தேக்கடி சபரிமலை போன்ற ஊர்களுக்கு செல்பவர்கள் மழை பெய்வதை அறிந்து செல்லவும் என எச்சரிக்கையும் விட்டிருக்கிறார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top