சமூகப் போராளி முகிலனை நாய் கடித்துள்ளது; சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தகவல்

சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் முகிலனை நாய் கடித்துள்ளதாக  தகவல் வெளிவந்துள்ளது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை கண்டுபிடிக்கும் பணியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஈடுபட்டிருந்த நிலையில், ஆந்திர போலீசார் முகிலனை கண்டுபிடித்துள்ளனர். திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலனை போலீசார் அழைத்து சென்ற வீடியோவும் வெளியானது.

இதன்படி முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஆந்திர போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று காட்பாடி ரெயில்வே காவல் நிலையத்திற்கு முகிலன் கொண்டு வரப்பட்டார். பின்னர் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் காட்பாடி சென்றனர். அங்கிருந்த ஆந்திர போலீசார், முகிலனை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.  பின்னர் முகிலனை வஜ்ரவேல் தலைமையிலான தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்தனர்.

திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்ட முகிலனை அடுக்கம்பாறை மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் நாய் கடித்த காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  நாய்க்கடிக்கு ஊசி போடப்பட்டு உள்ளது என்றும் சாப்பிடாத நிலையில் அவரது உடல் பலவீனம் அடைந்து காணப்படுகிறது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

சென்னை எழும்பூரில் சமூக செயற்பாட்டாளர் முகிலனிடம் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.  இதில் முகிலனை ஒரு வாரத்திற்கு முன் நாய் கடித்தது என அவர் விசாரணையில் கூறியுள்ளார்.  தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top