சுற்றுசூழல் போராளி முகிலன் மீட்கப்பட்டார்; கடத்தப்பட்டதாக பேட்டி

நேற்று திருப்பதியில் முகிலன் மீட்கப்பட்டார்.முகிலை திருப்பதியில்  நேரில் பார்த்ததாக அவரது பள்ளித் தோழர் மூலம்  தகவல் வந்தது.உடனடியாக அவரை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது

.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவருடைய பள்ளித் தோழர் தகவல் தெரிவித்துள்ளது மூலம் அவர் மீட்கப்பட்டார்.  .


சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், முகிலனை பற்றிய செய்திகள் நாளுக்குநாள் முரண்பட்ட செய்திகளாய் வந்துகொண்டிருந்தது. இதை திட்டமிட்டு செய்கிறார்கள் என்று மட்டும் தெரிந்தது.நீதித்துறையும் அவ்வளவு முனைப்பு காட்டியதாக தெரியவில்லை. ஆட்கொணர்வு மனு மிகவும் மெதுவாக நகர்ந்தது மக்களுக்கு சந்தேகங்களை எழுப்பி வந்தது இதற்கிடையே நேற்று முகிலன் மீட்கப்பட்டது தமிழக சமூக செயற்பாட்டாளர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் பெரிய ஆறுதலை கொடுத்தது  

நேற்று முகிலனை திருப்பதி ரயில்வே நிலையத்தில் பார்த்ததாக அவருடைய பள்ளித் தோழர் சண்முகம் முகிலன் மனைவியிடம் சொல்ல, அவர் உடனடியாக மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபனிடம் தகவலை பரிமாறியிருக்கிறார்.

ஹென்றி டிபன் உடனடியாக தமிழக டிஜிபி திரிபாதிக்கு தகவலை சொல்லி திருப்பதி ரயில்வே ஆந்திர போலீசிடமிருந்து முகிலனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் வைத்தார். அத்தோடு நிற்காமல் . இது தொடர்பாக  சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறதால் சிபிசிஐடி இயக்குனர் ஜாபர்சேட்டுக்கும்  தகவலை சொல்லி நடவடிக்கை எடுக்கச்சொல்லி இருக்கிறார்.


அதனைத் தொடர்ந்து சமூக செயற்பாட்டாளர்  ஹென்றி டிபேன் கூறுகையில், 

முகிலன் உயிருடன் பார்த்தாக செய்தி கிடைத்திருப்பது மகிழ்ச்சி. ஆந்திர காவல்துறை வசம் உள்ள முகிலனை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். முகிலனை மீட்டுக்கொண்டு வரும் வாய்ப்பை தமிழக காவல்துறை விட்டுவிடக்கூடாது.  முகிலனை உயிருடன் இருப்பதாக வந்த தகவலை அடுத்து டிஜிபி, சிபிசிஐடியை தொடர்பு கொண்டேன் என்றார்.

இதனைதொடர்ந்து முகிலன் திருப்பதியில் இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து முகிலன் திருப்பதியில் இருக்கிறாரா என்பதை விசாரித்து தெரிவிக்க ஆந்திர போலீசிடம் சிபிசிஐடி உதவிக்கோரியது.

தமிழக போலீசிடம் ஆந்திர ரயில்வே போலிஸ் முகிலன் என்று அறியப்பட்டவர் ஏதோ முழக்கங்கள் போட்டுக்கொண்டு வந்துகொண்டிருந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்யவிருந்ததாகவும் நாங்கள் சந்தேகப்பட்டு அவரை கைது செய்ததாகவும் சொல்லி இருக்கிறது

தமிழக போலீசிடம் முகிலனை ஒப்படைக்க ஆந்திரா போலிஸ் காட்பாடி ரயில்நிலையத்திற்கு வந்ததும் தமிழக சமூக செயல்பாட்டாளர்கள் காட்பாடி விரைந்தனர். தமிழக போலிஸ் ஒரு காரில் முகிலனை ஏற்றும்போது தான் கடத்தப்பட்டதாக கூறினார் முகிலன். உடனே தமிழக போலிஸ் முகிலனை காருக்குள் திணித்து அவரை பேசவிடாமல் அமுக்கியது பார்ப்பவர்களை கண்கலங்கச்செய்தது. தமிழ்நாட்டின் சுற்றுசூழல் மாசுபடாமல் இருக்க போராடும் ஒருவர் இப்படி காவல்துறையால் நடத்தப்படுவது நாளை காவல்துறை வரலாற்றில் பெரும் களங்கத்தை உருவாக்கும்.  

சென்னை சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட முகிலன் விசாரிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்.அவரை நாய் கடித்திருப்பதாக செய்திகள் வருகிறது. அதற்கு முறையான மருத்துவம் பார்க்கவேண்டும் அவரை சந்திக்க வேண்டும் என்று ஹென்றி டிபன் வலியுறுத்துகிறார்.காவல் துறை மறுப்பதாக செய்திகள் வருகிறது.

இந்த நிலையில், முகிலனை பார்க்க ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இருந்து அவரது மனைவி பூங்கொடி சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.

அவர் வந்த கார் கள்ளக்குறிச்சி அருகே விபத்தில் சிக்கியது. இதில், லேசான காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பூங்கொடி உடன் வந்தவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்.

டயர் வெடித்ததில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவற்றில் கார் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top