மாநிலங்களவை தேர்தல்: வைகோ வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். 


இதில், திமுக தரப்பில் சண்முகம், வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அந்த உறுப்பினர் பதவிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்ய 8-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

இதற்கிடையே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்குள் வராத தேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை.

அரசியலமைப்பு சட்டம் 191 ன் படியும் , மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8[3] ன் கீழ் இரண்டு ஆண்டுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தால் அவர் போட்டி போட வாய்ப்பிருக்காது. இது வைகோ அவர்களுக்கு பொருந்தாததால் அவர் போட்டியிட சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை    

இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவை செயலாளர் சீனிவசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 

முன்னதாக வேட்பு மனு தாக்கலுக்கு புறப்பட்ட வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் மற்றும் திராவிட லட்சியங்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க முடியாது என்றும் வைகோ கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top