நிர்மலா சீதாராமனின் பாஜக பட்ஜெட் எளிய மக்களுக்கு எதிரான கார்பரேட் முதலாளிக்கான பட்ஜெட்

நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நாட்டின் ஆண்டு நிதிநிலை அறிக்கையை-பட்ஜெட்டை  தாக்கல் செய்தார்.

இரண்டாவது முறையாக பாஜக ஆட்சியை பிடித்ததும் சமர்பிக்கப்படும் முதல் பட்ஜெட் இது.இந்திய ஒன்றியத்தின் பொருளாதார வளர்ச்சி மிகவும் மோசமான உள்ள சூழலில்,வடமாநிலங்களில் சாதிய திமிரும்,இஸ்லாமிய –சிறுபான்மைக்கு எதிரான செயல்பாடுகளும் அதிகரித்து சமூக சமநிலையை குலைக்கிற சூழலில் இந்த பட்ஜெட் சமர்ப்பிக்கப்படுகிறது மற்றுமின்றி வேலைவாய்ப்பின்மை அதிகரித்து இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கிற பின்புலத்தில் இந்த பட்ஜெட்டை அணுகவேண்டும்  

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதாரம் வளரும் என நிர்மலா சீதாராமன் கூறினார். ஆனால் எப்படி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை அவர் அறிவிக்கவில்லை.

இந்தியா சமீபத்தில் உலகத்தின் வேகமான வளரும் பெரிய பொருளாதாரத்தை கொண்டிருக்கும் நாடு எனும் அந்தஸ்தை இழந்து இருக்கிறது அதை சரி செய்ய தொழில் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் . இந்த பட்ஜெட் அதற்கு முயற்சித்ததாக தெரியவில்லை

விமான போக்குவரத்து, ஊடகம், அனிமேஷன் மற்றும் காப்பீட்டு துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை திறந்துவிடுவது குறித்து ஆராயப்படும் என்றார் இது உள்ளூர் முதலாளியத்திற்கு எதிரானது. ஏற்கனவே ,பாதிப்பில் இருக்கும் உள்ளூர் விமான போக்குவரத்து மேலும் சீரழிவை சந்திக்கும்.

பெரும்பாலான குடிமக்களுக்கு வருமான வரி அதிகரிப்பு இல்லை என்றாலும் அவர்களின் செலவு உயரக்கூடும்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரித்து உள்ளது.  மக்களின் அன்றாடத் தேவைக்கான பொருள்களின் விலை அதிகரிக்கக்கூடும். பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சுங்க வரி லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது  மற்ற வரிகளோடு சேர்த்து ரூ 2.50 உயர வாய்ப்பிருக்கிறது

இறக்குமதி வரி உயர்வால் தங்கம் முதலான மதிப்பு மிக்க உலோகங்களின் விலை அதிகரிக்கும்.தங்கம் மற்றும் பிற விலை உயர்ந்த கனிமங்கள் மீதான கலால் வரி 10%இல் இருந்து 12.5% ஆக உயர்த்தப்படுகிறது.சாதாரண மக்கள் தங்கம் வாங்க அதிக விலை கொடுக்கவேண்டியதிருக்கும்  

தொழில் நிறுவனங்கள் பணப் பரிவர்த்தனையை குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்க ஆண்டுக்கு ஒரு கோடிக்கும் மேல் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டால் 2% வரி பிடித்தம் செய்யப்படும்.என்பது சிறு வியாபாரிகளுக்கு பின்னடைவு

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 1,50,000 கோடி ரூபாய் நிதி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் 2019-2020இல் 1,05,000 கோடி ரூபாய் திரட்ட இலக்கு வைக்கப்பட்டுள்ளது.இவைகள் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க வழிவகுக்கும்

கார்ப்பரேட் என்று அழைக்கப்படுகிற பெரு நிறுவனங்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.250 கோடி என்றால் 25 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது. இந்த ரூ.250 கோடி என்ற வருவாய் வரம்பு பட்ஜெட்டில் ரூ.400 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது ஆண்டுக்கு ரூ.400 கோடி வரை வருவாய் உடைய பெரு நிறுவனங்களும் இனி 25 சதவீத வரி செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் 99.03 சதவீத பெரு நிறுவனங்கள் பலன் அடையும். வெறும் 0.7 சதவீத நிறுவனங்கள் மட்டுமே இந்த 25 சதவீத வரி வரம்புக்கு வெளியே இனி இருக்கும். அதாவது நாட்டில் உள்ள 99.03 சதவீத நிறுவனங்கள் இந்த பலனை பெற்றுவிடும். கார்ப்பரேட் நலனை காக்க இந்த பட்ஜெட் காத்திரமாக இருக்கிறது

ஆக, எளிய மக்களுக்கு எதிராக இந்த பட்ஜெட் கார்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக இருக்கிறது  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top