சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மீறி வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை! தீர்ப்பை எதிர்த்து வைகோ மனு

தமிழக அரசு தொடர்ந்த தேசத்துரோக வழக்கில் சுப்ரீம் கோர்ட்   தீர்ப்பை மீறி வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது

மதிமுக பொது செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதால் அது இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்ததாக  குற்றஞ்சாட்டப்பட்டு அவர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு, பின்னர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு கடந்த ஆண்டு மாற்றப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி ஜெ.சாந்தி முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. இவ்வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அப்போது தேசத்துரோக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், வைகோ குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான வைகோ, தனக்கான தண்டனை குறித்து இன்றே அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 

இதையடுத்து மேல்முறையீடு செய்ய உள்ளதால், தீர்ப்பு நகலை உடனே தரும்படி வைகோ கேட்டுக்கொண்டார்.தீர்ப்பு நகல் கொடுக்கப்பட்டதும் வைகோவின் வழக்கறிஞர்கள், வைகோ ஆகியோர்  தீர்ப்பை  கவனமாக படித்தார்கள்.தீர்ப்பில் தவறு இழைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே வைகோ நீதிபதியை பார்த்து பேச அனுமதிக்கேட்டார்  

தீர்ப்பில் “வைகோ கேட்டுக் கொண்டதால் குறைந்த பட்சதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நீதிபதி எழுதி இருப்பதை வைகோ கடுமையாக எதிர்த்தார். நான் கேட்காததை கேட்டதாக ஏன் எழுதி இருக்கிறீர்கள்? உங்களை அப்படி எழுதச்சொன்னது எது? உங்கள் மனதில் நஞ்சு இருந்தால் ஒழிய இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்.சட்டத்திற்கு உட்பட்டு ஆயுள் தண்டனை கொடுத்தாலும் இந்த வைகோ ஏற்றுக்கொள்வான்.நீங்கள் அதிகபட்ச தண்டனையே கொடுங்கள் அப்போதும் இந்த வைகோ விடுதலை புலிகளை ஆதரித்துதான் பேசுவான்” என்று திறம்பட தீர்மானமாக நீதிபதியிடம் தனது வாதத்தை முன் வைத்தார்

வைகோவின் வாதத்தை தொடர்ந்து தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.உடனடியாக ரூ.10 ஆயிரம் பணத்தை மட்டும் செலுத்தி விட்டு வெளியேறிவிட்டார்.

வெளியே பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் போது “இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்” என்று பேட்டியை ஆரம்பித்தார். தடை செய்யப்பட இயக்கத்தை பற்றி பேசுவதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இருக்கையில் நான் பேசியது எப்படி குற்றம் ஆகும் என்று கேள்வி எழுப்பினார் வைகோ.

தமிழகத்தில் அரசியல் வழக்கில் 124 A போடப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது இதுதான் முதல்முறை.தேசிய சட்ட ஆணையம் தொடர்ந்து 124 A பிரிவை நீக்கச்சொல்லி பரிந்துரைக்கும் வேளையில் அதே பிரிவில் அரசியலுக்காக காந்தி, பெரியாருக்கு பிறகு சுதந்திர இந்தியாவில் தண்டனை பெறும் முதல் அரசியல்வாதி வைகோ அவர்கள்தான்.ஆகையால்தான் இன்று மகிழ்ச்சியான நாள் என்கிறார் வைகோ

இந்த தீர்ப்பு விவாதிக்கவேண்டிய தீர்ப்பாக இருக்கிறது.சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக இருக்கிறது. இந்த தீர்ப்பால் அரசியலமைப்பு சட்டம் கேள்விக்கு உட்படுத்த வேண்டியதிருக்கிறது.இன்று பட்ஜெட் விவாதப்பொருளாக இருப்பதால் இது குறித்து யார் பேசப்போகிறார்கள் என்பது கேள்விக்குறி!      


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top