தமிழகத்தில் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி;கிணறுகள் தோண்ட ஓஎன்ஜிசி,வேதாந்தா தீவிரம்

ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழகம், புதுச்சேரியில் 20 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் கிணறுகள் தோண்ட தயாராகி வருகிறது.

\தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களிலும், கடலோர பகுதிகளிலும் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு கடந்த ஆண்டு முதல் மத்திய அரசு அனுமதி வழங்கி வருகிறது.

ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா நிறுவனங்கள் இதற்கான அனுமதியைப் பெற்று ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு கிணறு அமைக்க ஆய்வு செய்து வருகின்றன.

பூமிக்கு அடியில் பாறை இடுக்குகளில் இருக்கும் ஹைட்ரோகார்பனை எடுக்க கிணறுகள் தோண்டினால் டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரம் அழிந்து விடும் அபாயம் ஏற்படும் என்று பல்வேறு அமைப்புகளின் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்று டெல்டா மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதையடுத்து டெல்டா பகுதி மக்களிடம் கருத்து கேட்ட பிறகே இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. இந்த நிலையில் மத்தியஅரசு ஓசையின்றி ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல் உத்தரவு, இரண்டாவது உத்தரவு என்ற வரிசையில் தற்போது 3-வது சுற்று உத்தரவை மத்திய அரசு வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கரியாப்பட்டினம், கரும்பம்புலம், திருவாரூர் மாவட்டம் மடப்புரம் ஆகிய 4 ஊர்களில் கிணறுகள் தோண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த நிறுவனம் 474 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு பூமிக்கு அடியில் உள்ள பகுதிகளில் இருந்து ஹைட்ரோகார்ப்பனை எடுக்கும்.

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நாகை, ராமநாதபுரம், புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி பெற்றுள்ளது. நாகை மாவட்டத்தில் மட்டும் 459.83 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு இந்த நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 11 இடங்களில் கிணறுகள் தோண்ட ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தயாராகி வருகிறது.

அதுபோல ராமநாதபுரம் மாவட்டத்தில் 463 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள கருங்குடி, தேவிபட்டினம் அருகே உள்ள பெருவயல், பெருங்கலூர், ராமநாதபுரம் அருகே பவன்குளம் ஆகிய இடங்களில் கிணறுகள் தோண்டி ஹைட்ரோகார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் முதல் கட்ட பணிகளை தொடங்கி உள்ளது.

நேற்று தமிழக சட்டசபையில் எதிர்கட்சிகள் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து கேள்வி எழுப்புகையில் தமிழக முதல்வர் எடப்பாடியும் ,மந்திரியும் வாய் கிழிய திட்டம் தமிழக அரசை மீறி கொண்டுவரமுடியாது என்று பேசினார்கள்.அவர்கள் பேசி இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் ஹைட்ரோகார்பன் எடுக்க தமிழகம், புதுச்சேரியில் 20 இடங்களில் மத்திய அரசு ஆணை பிறபித்து விட்டது ,ஓஎன்ஜிசி நிறுவனம் கிணறுகள் தோண்ட தயாராகி வருகிறது

உயர்நீதி மன்றமும் மத்திய அரசின் ஊதுகுழல்போல் செயல்படுகிறது டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வரும் இந்த திட்டங்களை எதிர்த்து மக்கள் போராடாமல் என்ன செய்வார்கள்?   


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top