உலகக்கோப்பை கிரிக்கெட்;நீலநிற ஜெர்சியில் வங்காள தேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டம் பர்மிங்காமில் இந்திய – வங்காள தேச அணிகளுக்கு இடையே நடந்தது. அதில்  வங்காள தேசத்தை 28 ரன்களில் வீழ்த்திய இந்தியா, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.  அப்போது இந்திய அணியின் உடை பாஜகவின் அரசியல் நிர்பந்தத்தால் காவி நிற ஜெர்சிக்கு மாற்றப்பட்டு இருந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி திடீரென [ஆரஞ்சு] காவி நிற ஜெர்சி அணிந்து விளையாடியதால் படு தோல்வி அடைந்தது என்று பேசப்பட்டது.அதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி திடீர் தோல்வியை சந்தித்ததால் அவ்வாறு பேசப்பட்டது  

ஆரம்பத்திலே பல பேர் எதிர்த்தார்கள்.குறிப்பாக காஸ்மீரின் முன்னாள் முதல்வர்  மெகபூபா முப்தி,காங்கிரஸ் ,சமஜ்வாடி  கட்சிகள் கூட எதிர்த்து இருந்தார்கள். அப்போதெல்லாம் கண்டுகொள்ளாத பாஜகவினர் இந்தியா தோல்வியை தழுவியதும் உடனே பழையபடி நீல நிற உடைக்கு மாற்றிவிட்டார்கள்

நேற்று நடந்த போட்டியில் நீலநிற ஜெர்சி ஆடை அணிந்து வீரர்கள் உற்சாகமாக விளையாடினார்கள் வெற்றியும் பெற்றார்கள்.  ரோகித் சர்மா, லோகேஷ் ராகுலின் அதிரடி ஆட்டத்தால், வங்காள தேசத்தை 28 ரன்களில் வீழ்த்திய இந்தியா, அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில்  நேற்று மோதிய இந்தியா – வங்காள தேச அணிகளில் இந்தியா டாஸ்வென்றது . இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆரம்பம் முதலே வங்காள தேசத்தின் பந்துவீச்சை இருவரும் வெளுத்து வாங்கினர்.

உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா 4வது சதமடித்து அசத்தினார். அவர் 92 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரை தொடர்ந்து அரை சதமடித்து ஆடிய லோகேஷ் ராகுல் 77 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ரிஷப் பந்த் 48 ரன்னில் வெளியேறினார். இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 314 ரன்களை எடுத்துள்ளது. 

வங்காள தேசம் சார்பில் முஷ்டாபிஜுர் ரஹ்மான் 5 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன், ருபெல் உசேன், சவுமியா சர்க்கார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

இதைத்தொடர்ந்து, 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால், சவுமியா சர்க்காரும் ஆடினர்.

தமிம் இக்பால் 22 ரன்னிலும், சவுமியா சர்க்கா 33 ரன்னிலும், முஷ்பிகுர் ரஹிம் 24 ரன்னிலும், லிட்டன் தாஸ் 22 ரன்னிலும், மொசாடாக் ஹுசேன் 3 ரன்னிலும் அவுட்டாகினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ஷகிப் அல் ஹசன் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து அசத்தினார். அவர் 66 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், முகமது ஷைபுதின் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனாலும், வங்காள தேசம் 50 ஓவரில் 286 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து, இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், உலகக்கோப்பை அரை இறுதி சுற்றுக்கும் முன்னேறியது.

இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டும், ஷமி, சாஹல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆக, இந்திய அணி மீண்டும் நிலநிற ஜெர்சியில் ஆடியதால் வெற்றியை சுவைத்து, அரை இறுதிக்குள் நுழைந்தது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top