கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வு பணியில் ‘வட்டப்பானை’ கண்டெடுக்கப்பட்டது

சிவகங்கை மாவட்டம்,கீழடியில் நடக்கும்அகழாய்வில், பழங்காலத்து வட்டப்பானை கிடைத்தது, வரலாற்று ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடத்தப்பட்ட அகழாய்வு, தமிழரின் மிகப்பழைமையான, வரலாற்று காலத்திற்கு முன்பான நாகரீகத்தை உலகுக்கு பறைசாற்றியது.

ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆய்வு இது என்று சொல்லப்பட்டாலும் ,மக்கள் வாழ்ந்த பகுதியை தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்துவது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.

கடந்த 2015ம் வருடம் ஜூன் மாதம், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையின் அகழாய்வு பிரிவு கண்காணிப்பாளர் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு இந்த ஆய்வைத் தொடங்கியது.

தற்போது கீழடியில், ஐந்தாம் கட்ட அகழாய்வு பணி நடக்கிறது. விவசாயி கருப்பையா என்பவரின் நிலத்தில், குழிகள் தோண்டி, தொல்லியல் துறையினர், அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நடந்த ஆய்வில், வட்ட வடிவிலான பானையை கண்டறிந்துள்ளனர்.வட்டப் பானையின் கீழ் பகுதி சிறுத்தும், நடுப்பகுதி ஒடுக்கமான வட்ட வடிவிலும் உள்ளன. இதில் பெரும்பாலான பகுதி சிதிலம் அடைந்துள்ளதால், முழுமையாக எடுக்கமுடியவில்லை.

மத்திய தொல்லியல் துறை நடத்திய ஆய்விற்கும், தற்போது நடக்கும் ஆய்வில் கிடைத்த பானைகளுக்கும் இடையே, பெரிய வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

‘வட்டப் பானையின் காலத்தை கண்டறிந்த பின்னரே, அதன் பயன்பாடு குறித்து அறிய முடியும்’ என, தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கீழடி ஆய்வில் புதுப்புது  பொருட்கள் கண்டறியப்படுகிறது இது போன்ற வித்தியாசமான,காலத்தால் முற்பட்ட பொருளை தமிழக அரசு கவனமாக பாதுகாக்கவேண்டும் தமிழக மக்கள் பார்வைக்கும் இது கொண்டுவரப்பட வேண்டும்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top