சட்டப்பேரவையில் குடிநீர் பிரச்சினை; மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம், கிரண் பேடிக்கு கண்டனம்

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்தார். சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய ஸ்டாலின் கூறியதாவது:- “குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னைக்கு நீர் ஆதாரமான 4 ஏரிகளும் வறண்டு விட்டன.

2020-ல் சென்னையில் குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்று நிதி ஆயோக்  கூறியிருந்தது. ஆனால், 2019- ஆம் ஆண்டிலேயே குடிநீர் பஞ்சம் வந்துவிட்டது. நிதி ஆயோக் அறிக்கையை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை. குடிமராமத்து பணிகள் தோல்வி அடைந்து விட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது” இவ்வாறு அவர் பேசி வருகிறார்.

பிறகு , தமிழக அரசை குற்றம் சாட்டி புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி பேசியது குறித்து மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க ஸ்டாலின், தமிழக மக்களை கேவலப்படுத்தும் வகையில் ஆளுநர் கிரண் பேடி கருத்து தெரிவித்தது கண்டனத்திற்குரியது. கிரண்பேடியின் கருத்தை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்” என்றார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top