உடை காவிமயமானதால் இந்தியா கிரிக்கெட்டில் தோல்வி! ஒரு உளவியல் பார்வை

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பர்மிங்காமில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின.  இந்தப் போட்டியில் இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து விளையாடி தோற்றது. இதுவரை நீலநிற ஜெர்சியில் ஆடி வெற்றி பெற்றுவந்த  இந்திய அணி திடீர் தோல்விக்கு இந்திய அணியை மோடி காவிமயமாக ஆக்கியதே காரணம் என்று உலகெங்கும் பேசிவருகிறார்கள்.

இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் எல்லா அணிகளும் மாற்று ஜெர்சி அறிவித்து அதை ஒரே நிற ஜெர்சி கொண்ட அணிகளுக்கு எதிரான போட்டியில் அணிந்து பங்கேற்று வருகின்றன. அதில் தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இங்கிலாந்துக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆகையால், இங்கிலாந்து நீல நிற ஜெர்சியிலும் இந்திய அணி மாற்று நிறத்தில் ஆட வேண்டும் என்ற நிலையில் இந்திய அணிக்கு இந்த ஆரஞ்சு நிறஜெர்சி [காவி நிறம்] தேர்வு செய்யப்பட்டது

இந்த நிறத்தை எப்படி தேர்வு செய்தார்கள் என்பதுதான் பிரச்சனை.ஏற்கனவே பலவிசயங்களில் பாஜக தலையீடு இருக்கிறது என்ற விமர்ச்சனம் வந்துகொண்டு இருந்தாலும்.அதை கிரிக்கெட் ஆர்வலர்கள் கண்டுகொள்ளாமல் போய்விட்டார்கள்.உடை விசயத்தில் பாஜக தலையிட்டு காவிநிறத்தை திணித்தது ஆரம்பத்திலே பல பேர் எதிர்த்தார்கள்.குறிப்பாக காஸ்மீரின் முன்னாள் முதல்வர்  மெகபூபா முப்தி கூட எதிர்த்து இருந்தார்கள்  

ஆரஞ்சு நிற ஜெர்சி [காவிநிறம்]  அணிந்து இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதாக அறிவித்தது முதல்  இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு நாட்டையே, காவி மயமாக மாற்ற முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருந்தது.  சமாஜ்வாடி கட்சியும்  எதிர்ப்பு தெரிவித்து இருந்தது

இந்நிலையில், நேற்று இங்கிலாந்து அணியிடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது.இதுவரை தோல்வியை சந்திக்காத இந்தியா காவிமயமாக்கப்பட்ட புது ஜெர்சியின் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் தன்னம்பிக்கை இழந்து போய் விட்டார்கள் என்று விமர்ச்சனம் எழுகிறது.

காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி மெகபூபா முப்தி, இந்திய அணி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘இப்படி கூறுவது எனது மூடநம்பிக்கை என்றே கூறுங்கள். ஆனால், இந்திய அணி உலக கோப்பையில் தோல்வி அடைய காரணம் புதிய  ஜெர்சிதான்’ என பதிவிட்டுள்ளார்.

“இப்போது பாஜக மூடநம்பிக்கை பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள். ‘ராமர் பிறந்த இடம்’ ,பசுவதை என்று மனிதர்களை கொல்வது, சேதுசமுத்திர பாலம் எங்கள் நம்பிக்கை என்று சொல்வது இவையெல்லாம் பாஜகவின் மூட நம்பிக்கையின் அடையாளம் தானே இதை கேள்வி கேட்டால் மக்களை இந்து விரோதி என்பது,நாங்கள் ஜெர்சியை பற்றி பேசினால் மூட நம்பிக்கை என்பது பாஜக வின் இரட்டை வேடம் பல்லிளிக்கிறது” என்று முகநூலிலும் ட்விட்டரிலும் பாஜகவை வச்சி செய்கிறார்கள்.      

உடை என்பது, வெறும் உடை அல்ல! அது நம்பிக்கையின் அடையாளம். குறிப்பாக, காவி என்பது ஒரு அரசியல் நிறமாகி விட்டதால் இந்திய வீரர்கள் நிர்பந்திக்கப்பட்ட குற்ற உணர்வில் விளையாடினார்கள். ஆகையால்தான், தன்னம்பிக்கை இழந்து தோல்வியை தழுவினார்கள். அந்த உடை குறித்த கருத்தை கூட அது காவி நிறமாக இருந்ததால் சொல்ல தயங்கினார்கள் அதுதானே உண்மை ! .

இதற்கிடையே, புதிய டிசைன் தேர்வு செய்தது குறித்து “இந்திய கிரிக்கெட் அணியின் பழைய டி-20 தொடருக்கான ஜெர்சியில் இருந்து வடிவமைக்கப்பட்டதாக” ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.

இதுவரை இந்திய அணிக்கு 24 முறை உடை மாற்றப்பட்டுள்ள நிலையில் அதில் நீல நிறமே அதிகமாக இடம் பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top