கொரியாவின் எல்லைப்பகுதியில் கிம் ஜாங் உடன் டிரம்ப் சந்திக்க வாய்ப்பு; தென் கொரிய அதிபர் தகவல்

கொரிய நாடுகளை பிரிக்கும் எல்லை பகுதியில் கிம் ஜாங் உடன் டிரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என தென் கொரிய அதிபர் கூறியுள்ளார்.

ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளச்சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அந்த பதிவில், சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு உள்ளிட்ட மிக முக்கியமான சந்திப்புகளை நடத்தி விட்டு, ஜப்பானில் இருந்து தென்கொரியாவுக்கு புறப்படுகிறேன். அங்கு நான் இருக்கும்போது, வட கொரியாவின் தலைவர் கிம் இதை பார்த்தால், நான் அவரை எல்லையில் ராணுவம் விலக்கப்பட்டுள்ள பகுதியில் சந்திப்பேன். அவருடன் கை குலுக்குவேன். ஹலோ சொல்லுவேன் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு நடந்தால், ஓராண்டு காலத்தில் டிரம்பும், கிம்மும் சந்திப்பது மூன்றாவது முறையாக அமையும்.  கிம்முக்கு டிரம்ப் விடுத்துள்ள அழைப்பை நல்ல யோசனை என வட கொரியா வரவேற்றுள்ளது.  எனினும், இரு தரப்பு சந்திப்புக்கு தூதரக ரீதியிலான ஏற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை.

இதனிடையே தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் இந்த சந்திப்பு பற்றி கூறும்பொழுது, கொரிய தீபகற்பங்களை பிரிக்கும் ராணுவ படைகள் நீக்கப்பட்ட அடையாள பகுதியாக திகழும் பன்முன்ஜோம் என்ற இடத்தில், அமெரிக்கா மற்றும் வடகொரியா நாடுகளின் தலைவர்கள் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top