‘சஹ்ரான் ஹாஷிமை நான் நேரில் கண்டதே கிடையாது’ –நாடளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் மறுப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியூதீன் இலங்கை ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை அரசு கூறும் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான் ஹாஷிமை தான் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை என  தெரிவித்து இருக்கிறார்

நிஷ்கார் என்ற நபருடன் தான் இருக்கும் புகைப்படமொன்றை காண்பித்து தான் சஹ்ரானுடன் தொடர்பு கொண்டு இருப்பதாக வந்துள்ளதாக பிரசாரங்கள் போலியானவை என்றும் இது குறித்து நிஷ்கார் போலீஸ் தலைமையகத்தில் புகார்  செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி  தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரே, தான் மொஹமட் சஹ்ரான் தொடர்பில் இருப்பதான செய்தியை அறிந்துக் கொண்டதாக கூறிய அவர், சஹ்ரானை தான் புகைப்படத்தில் மாத்திரமே கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த நிலையில், மொஹமட் சஹ்ரான் ஹாஷிமுடன் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டதாக  கூறப்படும் சம்பவத்தையும் ரிஷாத் பதியூதீன் நிராகரித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top