ஜப்பானில் ஜி20 மாநாடு; வரவேற்பு நிகழ்ச்சியில் எல்லா நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டார்கள்

ஜப்பானில் ஜி20 உச்சிமாநாடு இன்று தொடங்கிய நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியின்போது அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துகொண்டனர்.


ஜப்பானின் ஒசாகா நகரில் இன்றும் நாளையும் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. இதற்காக ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒசாகா நகருக்கு வந்துள்ளனர். இன்று வரவேற்பு நிகழ்ச்சியுடன் உச்சிமாநாடு தொடங்கியது. 

அப்போது, ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்களை, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனித்தனியாக வரவேற்று மேடைக்கு அழைத்தார். அவர்களுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பின்னர், அனைத்து தலைவர்களும் ஒன்றாக சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். புகைப்படம் எடுத்து முடிந்ததும் மாநாட்டின் முதல் அமர்வு தொடங்கியது. தலைவர்கள் ஒவ்வொருவராக உரையாற்றினர்.


அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசும்போது, ஜி20 நாடுகளின் தலைவர்கள் வர்த்தகத்திற்கு முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என பேசினார். வர்த்தக பாதுகாப்புவாதம் அதிகரித்து வருவதை சீன தலைவர் கடுமையாக எச்சரித்தார்.

இதேபோல் உலகளாவிய வர்த்தகத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாகவும், தடையற்ற, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற வர்த்தகத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் ஜப்பான் பிரதமர் வலியுறுத்தினார்.கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top