கிரிஜா வைத்தியநாதனுக்கு ஏன் பதவி நீட்டிப்பு இல்லை! காமடி நடிகர் எஸ். வி.சேகர் காரணமா?

கடந்த 2016 டிசம்பரில் இருந்து தற்போதைய  தமிழக தலைமை செயலாளராக  பதவி வகித்து வருகிறார்  கிரிஜா வைத்தியநாதன். வரும் ஜூன் 30ல் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை செயலாளரை நியமிக்கும் ஏற்பாடுகளில் அரசு கவனம் செலுத்தியது.

இந்த பட்டியலில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் 3 பேர் இடம் பெற்றனர். கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என கூறப்பட்டது. ஆனால் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சண்முகம் திடீரென நியமிக்கப்பட்டது கிரிஜா வைத்தியநாதனுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

பாஜக வின் நிழற் பிரதிநிதியாய் இருந்த கிரிஜா வைத்தியநாதனுக்கு ஏன் பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என ஆரய்ந்தபோதுதான் தெரிந்தது, அதற்கு காரணமே அவருடைய மைத்துனர் எஸ்.வி.சேகர் தான் என்று

கிரிஜா வைத்தியநாதன் காமடி நடிகர் எஸ் வி சேகரின் அண்ணி என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்

கடந்த வருடம் பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாகப் பேசிய எஸ்.வி. சேகருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது,ஆனால் இவருக்குத் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அடைக்கலம் அளித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது

கைதாக வேண்டிய எஸ்.வி. சேகரை கைதில் இருந்து தலைமை செயலாளராக உள்ள அவரின் அண்ணன் மனைவி கிரிஜா காப்பாற்றி வருவதாகவும், இதனால் கிரிஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில்

எஸ்.வி.சேகரின் அண்ணன் மனைவி கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசின் தலைமை செயலாளராக உள்ளார். உயர் பதவியில் இருக்கும் இவர், தன்னுடைய உறவினர் எஸ்.வி.சேகரை போலீசார் கைது செய்யாத வண்ணம், அவருக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார். இது சட்டப்படி குற்றமாகும்.

எனவே, ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எஸ்.வி.சேகரை, போலீஸ் பிடியில் சிக்காமல் அவருக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்து வரும் கிரிஜா வைத்தியநாதன் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எஸ்.வி.சேகரை உடனடியாக கைது செய்ய, கிரிஜா வைத்தியநாதன் வீட்டில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது

கிரிஜா வைத்தியநாதனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில்  எஸ்.வி.சேகரை காப்பற்றிய அவரின் இந்த நடவடிக்கை பாஜக விற்கு பெரும் பின்னடைவை கொடுத்தது என விவாதிக்கப்பட்டதாக தெரிய வருகிறது.நடந்து முடிந்த நாடாளுமன்றதேர்தலில் ஒரு சீட்டு கூட பாஜக விற்கு கிடைக்காத நிலையில் மீண்டும் கிரிஜா வைத்திய நாதனுக்கு பதவி நீட்டிப்பு கொடுத்தால் பாஜக விற்கு இருக்கிற குறைந்தபட்ச மரியாதையும் போய் விடும் என கூறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆக ,தன்னை காப்பற்றிய அண்ணியின் பதவி நீட்டிப்புக்கு எதிராக எஸ் வி சேகரே இருந்தது அவருக்கு வருத்தம் அளிக்குமா?


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top