அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ மோடியுடன் சந்திப்பு

சமீப காலமாக அமெரிக்காவின் போக்கு வளர்ந்து வரும் நாடுகளை மட்டுமில்லாது வளர்ந்த நாடுகளான ரஷ்யா,ஜப்பான் ,சீனா போன்ற நாடுகளுடனும் பாதிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கிறது

இரானுடனான அமெரிக்க பொருளாதார தடை உலக நாடுகளுக்கு பெட்ரோல் ,டீசல் எண்ணெய் விவாகாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது  

இந்நிலையில் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ, இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இந்தியா கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவிற்கு மிக நெருங்கிய நண்பனாகி விட்டதால் இந்தியா இரானிடமிருந்து பெட்ரோல் வாங்க அமெரிக்கா தடை போடுகிறது. மற்றுமின்றி, ரஷ்யாவிடமிருந்து ஆயுதம், விமானம் வாங்குவதையும் தடை செய்ய பார்க்கிறது.இருதலைக்கொல்லி எறும்பாக இந்தியாவின் நிலை இருக்கிறது   

இந்தியா- அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவில் சில கசப்புணர்வுகள் சமீப காலமாக அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இந்தியாவுக்கு வந்துள்ளது கவனிக்கத்தக்கது

மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள மைக் பாம்பியோ, டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினர்.

இதேபோல் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரையும் மைக் பாம்பியோ சந்தித்து பேச உள்ளார்.  இந்த சந்திப்பில் இறக்குமதி வரி விதிப்பு, பாதுகாப்பு, எச்1பி விசா போன்ற விவகாரங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வரும் 28, 29 ஆகிய தேதிகளில் ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாடுக்கு இடையே பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் மைக் பாம்பியோவின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top