நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் ; திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு

கடந்த முறை பாஜக ஆட்சியில் இருக்கும்போது நீட் தேர்வு கொண்டு வந்தது. இதை எதிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் இயக்கங்கள்,அரசியல் கட்சிகள் ,மாணவர்கள், பெற்றோர்கள் என பலதரப்பட்டவர்கள் போராடியும் பாஜகவின் கைப்பாவையாக கல்லாக இருந்தது தமிழக அரசு.

மாணவி அனிதாவின் தற்கொலைக்கு பிறகு சம்பிரதாயத்திற்கு தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. கடந்த ஐந்து வருடமாக அதை பற்றி பேசாமல், பாராளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தபோதும் வாய் திறக்காமல் மௌனமாக கடந்து போய் தமிழக மாணவர்களுக்கு துரோகம் இழைத்தது. தமிழக அரசு இந்த நிலையில் இன்று நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தி பேசியது தமிழக மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது.

மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியதாவது:-

தமிழகத்தில் இருந்து சுமார் 13 லட்சம் மாணவர்கள் இந்த முறை நீட் தேர்வு எழுதிய நிலையில் அவர்களில் வெறும் 6 லட்சம் பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர்.  இந்த 6 லட்சம் பேரும் தனியாக கோச்சிங் சென்டர்களுக்கு சென்றவர்கள்.

இந்த கோச்சிங் சென்டர்களுக்கு ஒரு மாணவர் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார் என்றால் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்த கோச்சிங் சென்டர்கள் நீட் தேர்வை வைத்து சம்பாதிக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாத ஏழை எளிய மாணவர்கள் இந்த நீட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த ஆண்டு மட்டும் 5 மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உயிரிழந்திருக்கிறார்கள்.

எனவே தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக சட்டமன்றம் ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கக்கூடிய இரண்டு தீர்மானங்களை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவித முடிவும் எடுக்காமல் இருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top