பாஜக ஆட்சியில் அதிகாரிகளுக்கு நிர்பந்தம்;ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீர் ராஜினாமா

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் உயர் அதிகாரிகள் நிர்பந்திக்கப்படுவதும் பிறகு விலகுவதும் சாதாரண நிகழ்ச்சியாகி விட்டது.இப்போது  ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சர்யா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக பதவி வகிப்பவர் விரால் ஆச்சர்யா.  ரிசர்வ் வங்கியின் 4 துணை ஆளுநர்களில் ஒருவராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 23 பொறுப்பேற்ற விரால் ஆச்சர்யா, தனது பதவிக் காலம் முடிவதற்கு இன்னும்  6 மாதங்கள் உள்ள நிலையில்,  ராஜினாமா செய்துள்ளார். காரணங்கள் வெளிப்படையாக தெரியவில்லை ஆனால் நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு சென்று கல்விப்பணியில் ஈடுபட இருப்பதாக விரல் ஆச்சர்யா கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top