கடந்த முறை நிறைவேற்றப்படாத 38 சட்டமசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல்!

கடந்த முறை எதிர்கட்சிகளால் மக்கள் விரோத மசோதாக்கள் என்று நிராகரிக்கப்பட்ட 38-க்கும் மேற்பட்ட சட்டமசோதாக்கள் வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மந்திரிசபை 2-வது முறையாக பொறுப்பேற்ற பின்னர், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதுபற்றி கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளி விமான நிலையம் வந்த நாடாளுமன்ற விவகாரத் துறை மந்திரி பிரகலாத் ஜோஷியிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-



இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 38-க்கும் மேற்பட்ட சட்டமசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது. காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிப்பது, முத்தலாக் தடை உள்பட முக்கியமான பிரச்சினைகளுக்காக இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் அனைத்து சட்டமசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.என எதிர்பரர்கப்படுகிறது



நாங்கள் ஏற்கனவே எதிர்க்கட்சிகளை சந்தித்து பேசி உள்ளோம். நாடாளுமன்ற கூட்டம் சுமுகமாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.



கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top