கிழக்கு சீனா கடல் பகுதியில் ரஷியா-அமெரிக்கா போர் கப்பல் சந்திக்கவிருந்த பெரும் விபத்து தவிர்ப்பு

கிழக்கு சீனா கடல் பகுதியில் இன்று ரஷியா மற்றும் அமெரிக்கா கடற்படையின் போர் கப்பல்கள் மோதலுக்கு உள்ளாக இருந்த பெரும் விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது.

ரஷியா கடற்படையை சேர்ந்த ‘பசிபிக் பிலீட்’ என்ற மிகப்பெரிய போர் கப்பல் இன்று காலை கிழக்கு சீனா கடல் பகுதி வழியாக வேகமாக சென்று கொண்டிருந்தது. அதே பாதையில் நேர் கோட்டில் அமெரிக்க கடற்படையை சேர்ந்த விமானம் தாங்கி போர் கப்பலும் சென்றது.

சற்று நேரத்தில் தனது பாதையை மாற்றிக்கொண்ட அமெரிக்காவின் போர் கப்பல் சுமார் 50 மீட்டர் தூரத்தில் திடீரென்று ரஷியா போர் கப்பலின் குறுக்கே திரும்பியது. இதை கவனித்து விட்ட ரஷியா போர் கப்பலின் மாலுமி சமயோசிதமாக தனது கப்பலின் பாதையை உடனடியாக மாற்றினார்.

இதனால் இரு போர் கப்பல்களும் மோதிக்கொள்ளவிருந்த மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக ரஷியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top