உலகக்கோப்பை கிரிக்கெட் ;ஆஸ்திரேலியா உடனான போட்டியில் அதிக கவனம் தேவை – சச்சின் எச்சரிக்கை

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய அணி மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என சச்சின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

50 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30-ம் தேதி தொடங்கி இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இந்திய அணி முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இதற்கிடையே, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய உடனான போட்டியில் இந்திய அணி மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

கிரிக்கெட் விதிமுறைகளை மீறியதாக ஓராண்டுக்கு மேலாக கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த டேவிட் வார்னர், ஸ்டீவ் சுமித் ஆகியோர் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா மிகப்பெரிய பலம் பொருந்திய அணியாக உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் இந்த தொடரில் ரன் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். அந்த அணியினரின் பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது. 

ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் இந்திய அணி வீரர்கள் எச்சரிக்கையுடன் விளையாடவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி தான் விளையாடிய 2 ஆட்டத்திலும் (ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள்) வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top