உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விவரங்களை தெரிந்து கொள்ள கூகுள் தனது அசிஸ்டண்ட் சேவையில் மாற்றம் செய்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கியுள்ள நிலையில், கூகுள் புதிய சேவையை அறிவித்துள்ளது. அதன்படி பயனாளிகள் கிரிக்கெட் போட்டி சார்ந்த விவரங்கள், ஸ்கோர், அம்சங்கள் உள்ளிட்டவற்றை கூகுள் அசிஸ்டண்ட் மூலம் அறிந்து கொள்ளலாம்.

2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விவரங்களை அறிந்து கொள்ள கூகுள் புதிய வசதிகளை சேர்த்துள்ளது. அதன்படி அசிஸ்டண்ட் சேவையின் சர்ச் பெட்டியில் “ICC Cricket World Cup” என டைப் செய்து சர்ச் செய்தாலே போதுமானது. தற்சமயம் பயனாளிகள் போட்டி விவரங்களை ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மராத்தி மற்றும் உருது உள்ளிட்ட மொழிகளில் அறிந்து கொள்ள முடியும்.
கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் பார்க்க முடியாதவர்களுக்கு கூகுள் தனது அசிஸ்டண்ட் சேவையை கொண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அப்டேட்டகளை அறிந்து கொள்ளலாம். இத்துடன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் போதே ரியல்-டைம் நோட்டிஃபிகேஷன் வசதியும் வழங்கப்படுகிறது.
இத்துடன் இந்தியா அடுத்து ஆட இருக்கும் போட்டி சார்ந்த விவரங்களையும் கூகுள் அசிஸ்டண்ட் இடம் கேட்கலாம். வழக்கமான கூகுள் சர்ச் முறையிலும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.